வெள்ளி, 27 மே, 2011

வாசனைப் பயிர்கள் - 40

வாசனைப் பயிர்கள் - 40

ஏலக்காய்
மிளகு
அஜ்மோதகம்
சீரகம்
சதகுப்பை
முர்கள்
வசம்பு
சோம்பு
கிராம்பு
கரியால்
கருவாப்பட்டை
புதினா
ஒரிகானா
ஜுனிபர் பெர்ரி
புளி
சேஜ்
கசகசா
துளசி
கடுகு
இஞ்சி
மஞ்சள்
பெருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை
பிரிஞ்சி இலை
வெந்தயம்
ரோஸ் மேரி
ஓமம்
சீமைசீரகம்
வெள்ளைப்பூண்டு
கருவேப்பிலை
மாதுளை
சர்வ சுகந்தி
அதிமதுரம்
குங்குமப்பூ
ஜாதிக்காய்
திப்பிலி
அனாசிப்பூ
முள்ளிங்கி
கொத்தமல்லி
பெருங்காயம்

ஞாயிறு, 8 மே, 2011

அகத்தியர்

அகத்தியரால் எழுதப்பட்டது அகத்தியம் ஆகும். இதுவே முதல் இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் கிடைக்கப்பெறவில்லை என்பது வருந்தத் தக்கதாகும். இதனை முதல் நூலாகக் கொண்டே தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.

அகத்தியர் பற்றிய குறிப்புகள்:

அகத்தியர் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்திலோ அதன் பாயிரத்திலோ எதுவும் இல்லை. இதைப்போலவே சங்க இலக்கியத்திலும் எக்குறிப்புகளும் இல்லை.

பரிபாடலில் "பொதியின் முனிவன்" என்ற குறிப்பு உள்ளது. இதற்கு அகத்தியன் என்னும் மீன் என்று பரிமேலழகர் உரை கூறுகிறார்.

மணிமேகலையில், "அமர முனிவன் அகத்தியன்" என்ற குறிப்பு காணப்படுகிறது. இதனையே அகத்தியர் பற்றிய முதல் குறிப்பு என்று கூறலாம். உரையாசிரியர்களான அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர், நச்சினார்க்கினியர் உரைகளில் "பொதியம், தவமுனி, திருமுனி" என்று வருவனவற்றிற்கு அகத்தியர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வடமொழி நூல்களில் அகத்தியர் என்ற சொல்லாட்சி நிரம்ப காணப்படுகிறது.

அகத்தியர் பற்றிய இலக்கியப் பதிவுகள் இங்ஙனமிருக்க, தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்பதும் இவருக்கு பன்னிரு மாணாக்கர் இருந்தனர் என்பதும் அவர்களுள் தொல்காப்பியரே தலை மாணாக்கர் என்பதும் கற்பனையானவை ஆகும். அகத்தியர் பெயரில் வந்துள்ள நூல்களும் போலியானவையே ஆகும். வேறு யாரோ எழுதி அகத்தியர் எழுதியதாக உலவ விட்டுள்ளனர். இவர் பெயரில் வெளி வந்துள்ள நூல்களில் மருத்துவ நூல்களே அதிகம். அகத்தியர் பற்றி தமிழகத்தில் உலவும் கற்பனை கலந்த கதைகளில் ஒன்று இவருக்கும் தொல்காப்பியருக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் ஒரு பிரச்சனை. இது குறித்து அடுத்து எழுதுவேன்.

ஞாயிறு, 1 மே, 2011

தமிழ் இலக்கண நூல்கள்

தமிழில் உள்ள இலக்கண நூல்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். முதலில் இலக்கண நூல்களின் பெயர் பட்டியலைத் தருகிறேன். பின்னர் ஒவ்வொரு நூலாக அறிமுகம் செய்கிறேன்.


1. அகத்தியம்


2. தொல்காப்பியம்


3. இறையனார் அகப்பொருள்


4. அவிநயம்
5. காக்கைப் பாடினியம்
6. சங்க யாப்பு
7. சிறுகாக்கை பாடினியம்
8. நத்தத்தம்
9. பல்காயம்
10. பன்னிரு படலம்
11. மயேச்சரம்
12. புறப்பொருள் வெண்பா மாலை
13. தமிழ் நெறி விளக்கம்
14. யாப்பருங்கலம்
15. யாப்பருங்கலக் காரிகை
16. வீரசோழியம்
17. இந்திர காளியம்
18. நேமிநாதம்
19. வெண்பாப் பாட்டியல்
20. தண்டியலங்காரம்
21. நன்னூல்
22. அகப்பொருள் விளக்கம்
23. களவியற் காரிகை
24. பன்னிரு பாட்டியல்
25. நவநீதப் பாட்டியல்
26. வரையறுத்த பாட்டியல்
27. சிதமபரப் பாட்டியல்
28. மாறனலங்காரம்
29. மாறனகப்பொருள்
30. பாப்பாவினம்
31. சிதம்பரச் செய்யுள் கோவை
32. பிரயோக விளக்கம்
33. இலக்கண விளக்கம்
34. இலக்கண விளக்க சூறாவளி
35. இலக்கணக் கொத்து
36. தொன்னூல் விளக்கம்
37. பிரபந்த தீபம்
38. பிரபந்தத் திரட்டு
39. இரத்தினச் சுருக்கம்
40. உவமான சங்கிரகம்
41. முத்து வீரியம்
42. சுவாமிநாதம்
43. சந்திராலோகம்
44. குவலயானந்தம்
45. அறுவகை இலக்கணம்
46. விருத்தப் பாவியல்
47. மாணவர் தமிழ் இலக்கணம்
48. தமிழ் இலக்கணக் கும்மி
49. தமிழ் நூல்
50. யாப்பு நூல்
51. திருக்கோவைக் கிளவிக் கொத்து
52. திருக்கோவைக் கொளு