வியாழன், 9 பிப்ரவரி, 2012

மாநிலக் கருத்தரங்கம்

திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் செவ்வியல் இலக்கியங்களில் சூழலியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில் மாநிலக் கருத்தரங்கம் நடைபெற்றது. பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற கருத்தரங்கின் 8ஆம் அமர்வின் தலைவராக நான் செயல்பட்டேன். என் தலைமையில் மூவர் கட்டுரை வழங்கினர். அமர்வின் இறுதியில் நான்  கீழ்க்கணக்கு நூல்களில் சூழலியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில் கட்டுரையை ஒளிக்காட்சியாக வழங்கினேன். மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். மாலை 5-30 க்கு கருத்தரங்கு நிறைவடையும் வரையில் மாணவர்கள் ஆர்வம் குறையாமல் கேட்டுத் துய்த்தனர். கர்த்தரங்க ஏற்பாடுகள் மிகச் சிறந்த முறையில் அத்துறையின் தலைவர் முனைவர் தனராசன் முதலான பேராசிரியர்களால் செய்யப்பட்டிருந்தன.

ருத்தரங்கத்தின் தலைமையுரையில் பேராசிரியர் முனைவர் க.துரையரசன்