வியாழன், 14 ஜனவரி, 2010
பொங்கல் வாழ்த்துகள்
புதுமைகள் நிறையட்டும்
பாவங்கள் விலகட்டும்
புண்ணியங்கள் பெருகட்டும்
தீமைகள் ஒழியட்டும்
நன்மைகள் வளரட்டும்
நல்வாழ்த்துகளுடன்
பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்
திங்கள், 30 நவம்பர், 2009
திருமாவுண்ணி - கண்ணகி
சங்க இலக்கியத்தில் திருமாவுண்ணி என்னும் பத்தினிப் பெண் கூறப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூறப்படுகிறாள். இருவருமே கணவனை இழந்தவர்கள். ஒரு முலையை இழந்தவர்கள். இதன் காரணமாக இருவரும் ஒருவரே என்று சொல்லப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இருவரும் வேறானவர்கள். இதற்கான காரணத்தை மயிலைசீனி.வேங்கடசாமி நன்கு ஆராய்ந்து விளக்கிக் கூறுகிறார்.
இருவரும் ஒருவரே என்பதற்கான காரணங்கள்:
1 இருவருமே கணவனை இழந்தவர்கள்
2 இருவருமே ஒரு முலையை இழந்தவர்கள்
3 வேங்கை மர நிழலில் அமர்ந்து இருந்தவர்கள்
இருவரும் வேறானவர்கள் என்பதற்கான காரணங்கள்: தினைப்புனம் காவல் காக்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.
திருமாவுண்ணி:
இவள் வேங்கை மர நிழலில் உயிர் விடவில்லை.
இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்பட்டிருந்தது.
இவள் தன் கொங்கையை அறுத்தது வேங்கை மரத்துக்கு அருகில்.
கண்ணகி:
இவள் வழிநடைப் பயணக் களைப்பு நீங்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.
இவள் வேங்கை மரத்து நிழலில் உயிர் விட்டாள்.
இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்படவில்லை.
இவள் கொங்கை அறுத்து வீசியது மதுரை மாநகரத்தில்.
எனவே திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறானவர்கள்.
ஞாயிறு, 29 நவம்பர், 2009
நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்
இதனை மயிலை சீனி. வேங்கடசாமி பின்வருமாறு மறுத்துரைக்கிறார்:
நிகண்டு நூல் செய்தமையால் நிகண்டனார் என்று பெயர் பெற்றிருக்க மாட்டார். மாறாக நிகண்டாசிரியர் என்றே அழைக்கப் பெற்றிருப்பார். நிகண்டன் என்றால் சமண சமயத்தார் என்று பொருள். எனவே இவர் சமணசமயத்தவராக இருக்கலாம். எனவே இவர் நிகண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
மான் கொம்பை கைக்கோலாகக் கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டார் என்பதும் சரியானது இல்லை. சமதண்டம் என்பது ஓர் ஊரின் பெயர். அதுபோல கலைக்கோட்டுத்தண்டம் என்பதும் ஓர் ஊரின் பெயராக இருக்கலாம். அவ்வூரைச் சேர்ந்தவரான இப்புலவர் அவ் ஊரின் பெயரால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
எனவே, சமண சமயத்தைச் சேர்ந்த நிகண்ட வாதியான இவர் நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கபட்டார் என்பது மயிலாரின் ஆய்வு முடிபு ஆகும்.
வியாழன், 26 நவம்பர், 2009
காக்க... காக்க... சுற்றுச் சூழல் காக்க
உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலவி வருவதை அனைவரும் அறிவோம். ஆயினும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் களைவதைப் பற்றியோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வோ நமக்கு இருப்பதில்லை. இந்த ஆதங்கத்தின் விளைவாக எழுந்தது இக்கட்டுரை ஆகும். இக்கட்டுரையைப் படிப்பவர்களில் எவரேனும் ஒருவருக்கேனும் சுற்றுச் சூழல் பற்றிய தாக்கம் சிறிதளவேனும் ஏற்பட்டாலும் கூட நான் பெரிதும் மகிழ்வேன்.
உயிரனங்களின் சூழலுக்கேற்ற செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளைச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று கூறலாம். சூழலியல் என்ற சொல் அய்காஸ் (eicos) என்ற கிரேக்கச் சொல்லை மூலமாகக் கொண்டு தோன்றியது ஆகும்.
மனிதன் தன் உறைவிடத்தையும் உறைவிடத்தின் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளும் சிந்தனை முறையே சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று ஏர்னெஸ்ட் ஹெகல் குறிப்பிடுகிறார்.
எனவே, சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலை. அதாவது நம்மைச் சுற்றி உள்ள இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு இன்று சமூகத்தில் பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது. இதைத்தான் சுற்றுச்சூழல் காப்பு அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்றெல்லாம் கூறுகின்றோம்.
சூழலியல் அறிஞர்கள் சுற்றுப்புறச் சூழலைச் சமூகவியல் நோக்கில் சூழலியல், மானிடவியல் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் என்று பகுத்துக் காட்டுகின்றனர். இம்மூன்றும் சமூக உருவாக்கத்தை, வாழ்க்கை முறைகளை மையமாகக் கொண்ட நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகும்.
சமூகவியல் நோக்கில் சூழலியல் ஒவ்வொரு சமூகத்திலும் சாதி, சமயம், கல்வி, தொழில் போன்ற நிறுவனங்கள் உண்டு. இந்தச் சமூக நிறுவனங்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று இணக்கமான உறவைப் பெற வேண்டுமெனில், அவை இயற்கையுடன் இணக்கமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். சமூக ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சுற்றுப்புறச் சூழலாக மாறியது என்று சமூகவியலார் விளக்குவர்.
மானுடவியல் நோக்கில் சூழலியல் மானுடச் சமூகத்திற்கும், அவர்களின் சுற்றுப்புறச் சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராய்ந்து விளக்குவது மானுடச் சுற்றுப்புறச் சூழலியல் எனப்படும்.
பண்பாட்டுச் சூழலியல் ஒரு குறிப்பிட்ட சூழலில், சில குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறுகளைத் தழுவிக் கொள்ளுதல் அல்லது அச்சூழலுக்கு ஏற்றவாறு தம் வாழ்வியல் முறைகளைப் பொருத்தமுற மாற்றியமைத்துக் கொள்ளுதலை விளக்குவது பண்பாட்டுச் சூழலியல் என்று அழைக்கப்படுகிறது.
சூழலியல் அறிஞர்கள் பல கோணங்களில் சூழ்நிலைக் காரணிகளை அணுகுவதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒல்லும் வகையெல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய அறிவை நாம் பெற முயல வேண்டும் - சூழலியல் பற்றிய அறிவைப் பொதுமக்களுக்கு அறிஞர்களும் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாமர மக்களுக்கும்கூட சுற்றுச் சூழல் பற்றிய புரிதல் ஏற்படும்.
மனிதன் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றான். இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவனால் வாழவே முடியாது. சங்க காலத்திலும் சரி - இன்றும் சரி மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தியே வாழ்ந்து வந்தனர; வாழ்ந்து வருகின்றனர்.
சங்க கால மக்கள் இயற்கை வளங்களை, ஆற்றல்களை அழிக்கவேயில்லை என்று கூற முடியாது. ஓரளவு அழித்தார்கள். ஆனால் அழித்த ஆற்றலைப் புதுப்பித்தலையும் செய்து கொண்டு இருந்தனர். இன்று ஆற்றலைப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy Resources) என்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் (Non Renewable Energy Resources) என்றும் பிரிக்கின்றனர். சங்க கால மக்கள் புதுப்பிக்க கூடிய ஆற்றலையே அதிகம் பயன்படுத்தினர். மரங்களை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்ட மக்கள் வெட்டிய மரங்களையும் வளர்க்கத் தவறவில்லை. வீட்டைச் சுற்றி நொச்சி மரம் வளர்த்தனர் சங்க மக்கள். ஏதோ ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று எண்ணாமல் மருத்துவப் பண்புகள் நிறைந்த, இதயத்திற்கும், சுவாச உறுப்புகளுக்கும் நலம் தரக் கூடிய தாவரங்களை வளர்த்தனர்.
சங்க காலத்தில் வாழ்ந்த மக்களைக் காட்டிலும் இன்றைய நவீன காலத்தில் வாழும் மக்களுக்கு மிகுந்த சுற்றுச் சூழல் அறிவு இருக்கும் என்று கூறலாம். ஆனால், சங்க கால மக்கள் சுற்றுச் சூழலிடத்துக் கொண்டிருந்த பய பக்தி இன்றைய மக்களிடம் இல்லை என்றே கூற வேண்டும்.
ஏனெனில், இன்றைய மக்கள் வீடுகள் கட்டுவதற்குக் காடுகளையும், விளை நிலங்களையும், ஏரிகளையும் அழிக்கின்றனர். அவற்றில் வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். அதனால் விளைகின்ற சுற்றுச் சூழல் கேடுகள் சொல்லி மாளாது.
சமீபத்தில் செய்தித் தாள்களில் வந்திருந்த செய்திகளை அனைவரும் கண்டிருப்பீர்கள். அரசு அலுவலராக இருந்த சிலர் புறம்போக்கு நிலங்களையும் ஏரி, குளங்களையும் பட்டா போட்டு விற்று விட்டனர். இது போன்று தெரிந்தே செய்கின்ற சுற்றுச் சூழல் கேடுகள் இன்று ஏராளம் ... ஏராளம்.
உங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கிறதா? புறம்போக்கு நிலங்களையும், ஏரி குளங்களையும் பட்டா போட்டது எப்படி சுற்றுச் சூழல் கேடாகும் என்று. சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சென்னை மாநகரமே மிதந்ததே! இதற்கு என்ன காரணம்?
மழைநீர் செல்லக் கூடிய வடிகால் வசதிகளை அரசு செய்து கொடுத்திருந்தும் அவற்றைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளாமையே ஆகும்.
மழைநீர் சென்று அடையக் கூடிய ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது - மழைநீர் செல்லக் கூடிய பாதைகளை அடைத்து கடைகள், வீடுகள் கட்டிக் கொண்டது - மழைநீர் செல்லக் கூடிய பாதைகளில் வீணான திடப் பொருள்களைப் போட்டமையால் நீரோட்டம் தடைப்பட்டது - இவை போன்ற பலவித காரணங்களால் தான் சென்னை நகரம் மிதக்கக் காரணமாயிற்று.
நான் ஏன் இதை எடுத்துக்காட்டினேன் என்றால் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு என்பது நாம் கண்கூடாகக் காணும் ஒன்று. இதன் விளைவாக சென்னை நகரம் மிதந்ததும் நாம் கண் கூடாகக் கண்ட ஒன்று. இதுபோல் இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
எனவே, சுற்றுச் சூழலைச் சரிவரப் பாதுகாக்கவில்லை என்றால் மனித சமுதாயமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் நிலை மட்டுமின்றி மனித சமுதாயமே அழிந்து போகின்ற அபாயம்கூட ஏற்படும். தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.
வேலியில ஓடுற ஓணாண
மேல தூக்கிப் போட்டுக்கிட்டு
குத்துதே குடையுதே
என்பது அப்பழமொழி.
சுற்றுச் சூழல் கவனம் நம் அனைவருக்கும் உடனடியாக ஏற்பட வேண்டும். இல்லை என்றால் மேற்சுட்டிய பழமொழி உண்மையாகி விடும்.
புதன், 25 நவம்பர், 2009
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள்
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் :
திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒன்றா?
கண்ணகி மதுரையை எரித்தாளா ?
காவிரியா? காவேரியா?
கோழி பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா?
இவை தொடர்பாக விரைவில் எழுதுவேன்.
திங்கள், 23 நவம்பர், 2009
இணையமும் இனிய தமிழும்

வணக்கம். எங்கள் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இணையமும் இனிய தமிழும் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் தமிழ் தகவல்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. நூலின் விவரம் வருமாறு:
இணையம்: அறிமுகமும் வரலாறும்
இணையவழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்
மின் நூலகம்
ஒருங்குறியீட்டு முறை
இணைய இதழ்கள்
வலைப்பூக்கள்
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
கல்விசார் இணைய தளங்கள்
வேலை வாய்ப்பு இணைய தளங்கள்
ஆகிய தலைப்புகளில் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.
விலை; ரூபாய் 60
வெளியீடு: இசைப் பதிப்பகம்
சபரி நகர், டாக்டர் மூர்த்தி சாலை,
கும்பகோணம் - 612 001, தமிழ்நாடு.
ISBN: 978-81-908398-0-8௦
பக்கங்கள்: 128
ஆண்டு: சூன் 2009
வியாழன், 12 நவம்பர், 2009
இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,
வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை இணையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இணையமும் இனிய தமிழும் என்னும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். இணையம் பற்றி அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் இணையத்தில் தமிழ் அத்தகவல்கள் கிடைக்கும் இடங்கள் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
கிடைக்கும் இடம்: ௨௪ இசை இல்லம், சபரி நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, கும்பகோணம்612001. தமிழ்நாடு .
வியாழன், 23 ஏப்ரல், 2009
î뢬ê ñ£õì¢ìî¢ î¤¼ð¢¹èö¢î¢ îôé¢è÷¢
ºù¢Â¬ó
Þõó¢ ð£®ò ð¢¹èö¤ô¢ 1307 Þ¬êð¢¢ð£ìô¢è÷¢ à÷¢÷ù. Þõø¢Á÷¢ 1088 êï¢î «õÁð£´è÷¢ à÷¢÷ù. Þõ¬óð¢«ð£ô Ýò¤óè¢èíè¢è£ù êï¢î «õÁð£´è÷¤«ô ð£ìô¢ ¹¬ùï¢îõó¢è÷¢ âõ¼ñ¢ Þôó¢. ð¢¹èö¤ô¢ à÷¢÷ Þ¬êî¢î£÷é¢è÷¢, Þ¬êËô¢è÷¢ âõø¢ø¤½ñ¢ Þìñ¢ ªðø£î¬õ ݰñ¢. (è£í¢è; õ¤è¢è¤ð¢ð¦®ò£)
õ£Ïó¢(7), õ¤¬ìñ¼Éó¢(4), õ£´¶¬ó(1), è¢èì×ó¢(2), âí¢èí¢(1), â좮袰®(1), ¬õò£Á(1), °ìõ£ò¤ô¢(2), °ñ¢ð«è£íñ¢(7), ê¤è¢èô¢(2), ꢪêé¢è£ì¢ì颰®(1), îë¢ê£×ó¢(3), î¤ó¤¹õùñ¢(1), èꢲóñ¢(1), ðï¢î¬íïô¢Öó¢(7), ð¢¢ðó£ò¢î¢¶¬ø(1), ð¬öò£¬ø(1), ð¢¢ðùï¢î£÷¢(1), ñ¼î¢¶õ袰®(1), ñò¤ô£´¶¬ó(1), õô뢲ö¤,(1), ¬õî¢î¦²õóù¢«è£õ¤ô¢(6).
ê¦ó¢è£ö¤(14), õ¤¬ìè¢èö¤(8), î£ù¢«î£ù¢ø¤ âù¢Âñ¢ Ýè¢Ãó¢(1), èï¢îù¢°®(1), î¤ô¬îð¢ðî¤ âù¢Âñ¢ «è£ò¤ô¢ð(3), õ£ë¢ê¤òñ¢(1), õ¤ø¢°®(1), õ¤üò¹óñ¢(1), ï£èð¢¢ð좮ùñ¢(3), õô¤õôñ¢(1), ¼î¢î¤ âù¢Âñ¢ °î¢î£ôñ¢(1), õ¦ö¤ñ¤ö¬ô(1), ªè£ì¢¬ìÎó¢(1), ê¤õ¹óñ¢(1), è²õóñ¢(1), Ãï¢îÖó¢(1),
ê¢êî¢î¤ºî¢îñ¢(1), ð¢¢ð¬öò£¬ø(1), ê¢êè¢è¤óð¢¢ð÷¢÷¤(1), 袰óé¢è£´¶¬ø(3), ð¢Ì¼î¢î¤(1),ªïò¢î¢î£ùñ¢(1), Þî¢îôé¢èÀ÷¢ °ø¤ð¢ð¤ìî¢îè¢è¬õ ðø¢ø¤ò ð¢¹èö¢ê¢ ªêò¢î¤è¬÷î¢ ªî£ìó¢ï¢¶ «ï£è¢°«õ£ñ¢.
Þî¢îôî¢î¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¤ù¢ «õô¤¬ù𢠹èö¢ï¢¶ ð£´è¤ø£ó¢ ܼíè¤ò£ó¢. Þõó¶ ð£ìô¢è÷¤ô¢ º¼è𢠪ð¼ñ£ù¤ù¢ «õô¤¬ù𢠹èö¢ï¢¶ ð£´îô¢ âù¢ ðóõô£èè¢ è£íð¢¢ð´è¤ø¶.
Þõ¢×ó¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ Þ¬øõ¬ù, «õî袰 «ñø¢ðì¢ìõù¢ âù¢Áñ¢, «îõó¢èÀè¢°î¢ î¬ôõù¢ âù¢Áñ¢, èìð¢¢ð ñ£¬ô¬ò Üí¤ï¢îõù¢ âù¢Áñ¢, ñ£¬ù åî¢î õ÷¢÷¤¬òê¢ êï¢î¤î¢îõù¢ âù¢Áñ, Åó¬ùî¢ «î®ê¢ ªêù¢øõù¢ âù¢Áñ¢, î¦ð¢ªð£ø¤ò£ò¢î «î£ù¢ø¤òõù¢ âù¢Áñ¢ Þõó¢ °ø¤ð¢ð¤´è¤ø£ó¢.
õ£Ïó¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù - ð£«ô£, «î«ù£, ªõô¢ôè¢è좮«ò£, «îõó¢è÷¢ è¬ìî´î¢î Üñ¤ö¢î«ñ£, ñù¢ñî«ù£, Åó¤ò«ù£, ºî¢«î£ âù¢ªøô¢ô£ñ¢ ñ¤è õ¤ò «ð£ø¢Áñ¢ ܼíè¤ó¤ò£ó¢ õ£Ïó¤ù¢ ªð¼ë¢ªêô¢õñ£è º¼è𢠪ð¼ñ£ù¢ î¤èö¢õî£è¾ñ¢ °ø¤ð¢ð¤´è¤ø£ó¢.
õ¤¬ìñ¼Éó¢;
Þõ¢×ó¤ù¢èí¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¤ìñ¢ ñè¢è÷¢ Þö¤°íî¢îó¢è÷£è Þ¼ð¢¢ð¬î âô¢ô£ñ¢ â´î¢¶è¢Ãø¤ Üîù¤ù¢Áñ¢ Üõó¢è¬÷ õ¤ôè¢è¤ð¢ ªð¼ñ£ù¤ù¢ õ®è¬÷ ܬìò Üõó¢èÀ袰 ܼ÷¢ ªêò¢ò «õí¢´ñ¢ âù¢Á º¬øò¤´è¤ø£ó¢.
ñù¤îó¢è÷£èð¢ ð¤øï¢îõó¢è÷¢ ªðí¢í¤ù¢ð ï£ì¢ìñ¢ ªè£í¢ìõó¢è÷¢; õ¦´ñ¢ õ£ê½ñ¢ ñ£ìºñ¢ Ãìºñ¢ è좮 õ£ö¢õô ñ¤°ï¢î Ýó¢õñ¢ è£ì¢´ðõó¢è÷¢; îù袰÷¢ Þ¬íòð¢ ªðø¢ø ˬôê¢ ªê½î¢¶õ¬î ñ좴«ñ èì¬ñò£èè¢ ªè£í¢ì áê¤ «ð£ô îñ¢¬ñê¢ ê£ó¢ï¢îõó¢èÀ袰ñ좴«ñ «õí¢´õù ªêò¢¶ õ£ö¢ï¢¶ õ¼ñ¢ Þòô¢¹¬ìòõó¢è÷¢ Þõó¢è÷¢.
Þô¢¬ô âù¢Á õ Þóï¢îõó¢èÀ袰 å¼ ê¤ø¤¶ñ¢ ßò£ñô¢ Üõó¢è¬÷ Üé¢«è ªêô¢; Þé¢«è ªêô¢ âù¢Á ܬôè¢èö¤î¢¶ Þù¢ðñ¢ è£í¢«ð£ó¤ù¢ ²òïôñ¤è¢è «ðꢫê ïô¢ôªîù¢Á ïñ¢ð¤ àôè ñè¢è÷¢ õ£ö¢è¤ù¢øùó¢.
«ê£¬è «ï£ò¢ - Þóî¢îñ¢ Þô¢ô£¬ñò£ô¢ ºèñ¢ ªõÀ á¶ñ£Áê¢
ªêò¢»ñ¢
ñ«è£îó «ï£ò¢ - õò¤ø¢Á õô¤
ð´õí¢ - å¼õ¬è𢠹í¢è좮
èôè¢èºøê¢ ªêò¢ò¾ñ¢, ܬôê¢ê½øê¢ ªêò¢ò¾ñ¢, êô¤ð¢¹øê¢ ªêò¢ò¾ñ¢ ï¦ õ¤ìô£«ñ£ âù¢Á õ¤ù¾è¤ø£ó¢.
ð¤óñÂ袰 àð«îêñ¢ ªêò¢î¼÷¤ò¶ñ¢, ñ£ó¢è¢èí¢«ìò¼è¢è£è ê¤õªð¼ñ£ù¢ âñ¬ù à¬îî¢î¼÷¤ò¶ñ¢ Þî¢îôî¢î¤ô¢î£ù¢. Þ颰 ñ£ó¢è¢èí¢«ìòó¢ âñù¤ìñ¤¼ï¢¶ ê¤õ ܼ÷£ô¢ ñ¦í¢ì£ó¢ âù¢ð¶ ¹ó£íñ¢. âù«õ âñ ðòñ¢ ï¦è¢°ñ¢ îôñ¢ âù¢Áñ¢ Þî¬ùè¢ ÃÁõó¢. õ¦ö¤ñ¤ö¬ô,
¬õò£Á, ¬õè£×ó¢, ªõí¢è£´ Ýè¤ò¬õ âñ ðòñ¢ ï¦è¢°ñ¢ ã¬ùò îôé¢è÷£°ñ¢.
°ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶ õ£Ïó¢ ªêô¢½ñ¢ õö¤ò¤ô¢ °ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶
15 è¤.ñ¦. Éóî¢î¤ô¢ °ìõ£ò¤ô¢ à÷¢÷¶. Þî¬ù Þð¢ªð£¿¶ °ìõ£êô¢ âù¢Á ܬöè¢è¤ù¢øùó¢.
ñò¤ô£´¶¬ø;
ñ£òõóñ¢, ñ£Îóñ¢ âù¢ªøô¢ô£ñ¢ ܬòè¢èð¢¢ðì¢ì Þõ¢×ó¢ Þð¢ªð£¿¶ ñò¤ô£´¶¬ø âù¢Á õöé¢èð¢¢ð´è¤ø¶. ð¤óñ¢ñ «îõù¢ Þî¢îôî¢î¤ô¢ à¬ø»ñ¢ Þ¬øõ¬ù õö¤ðì¢ì£ù¢ âù¢ð¶ äî¦èñ¢. ð£ó¢õî¤ «îõ¤ ñò¤ô¢ à¼õñ¢ ªè£í¢´ ê¤õªð¼ñ£¬ù Þõ¢×ó¤½ñ¢ ñò¤ô£ð¢Ìó¤½ñ¢ õö¤ðì¢ìî£èè¢ ÃÁõó¢. Þî¢î¬èò ðô ê¤øð¢¹è¬÷ð¢ ð¬øê£ø¢Áñ¢ õ¬èò¤ô¢ Ýò¤óñ£ù£½ñ¢ ñ£Îóñ¢ «ð£ô¢ Ý裶 âù¢ø ðöªñ£ö¤ õöè¢è¤ô¢ à÷¢÷¶ °ø¤ð¢ð¤ìî¢îè¢èñ¢.
Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù𢠹èö¢ï¢¶ å¼ ð£ìô¢ 𣮻÷¢÷£ó¢ ܼíè¤ó¤ï£îó¢. Þð¢ð£ìô¤ô¢ îù袰 º¼è𢠪ð¼ñ£ù¤ù¢ õ¼ì¢«ðÁ 褬ìè¢èð¢ ªðø¢ø¬ñ¬ò ‘âù¢Â¬ìò ºñ¢ñôé¢è¬÷»ñ¢ ÜÁî¢¶î¢ ªî£¬ô, ð£´õ£ò£è âù Ë âùè¢°î¢ î¤¼õ¼÷¢ ð£ô¤è¢è, Üîù¢ð® Ü®«òù¢ àù¢¬ù𢠹èö¢ï¢¶ ð£®ù, à¿õôù¢¹ìù¢ ð£®ù ð£ìô¢è¬÷ ªñê¢ê¤ð¢ ð¤ó¤òð¢¢ð좴 «ñô£ù «ðø¢ø¤¬ù âù袰 ܼ÷¤ù º¼è«ù!’ âù¢Á ñè¤ö¢ê¢ê¤ð¢ ªð£é¢è ܼíè¤ó¤ò£ó¢ °ø¤ð¢ð¤´è¤ø£ó¢.
õô뢲ö¤;
Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù èô£ð ñò¤ô«ù! «ò£è¤è÷¢ ðè¢èî¢î¤ô¢ õ¤÷颰ñ¢ ²õ£ñ¤«ò! Üöè¤ò õô뢲ö¤ò¤ø¢ ªêô¢õ«ù! «îõó¢è÷¢
ªð¼ñ£«ù! âù¢ªøô¢ô£ñ¢ õ¤÷¤î¢¶ ªð¼ñ£ù¤ù¢ õ¼¬÷ ܼíè¤ó¤ò£ó¢ «õí¢´è¤ø£ó¢.
º¼è𢠪ð¼ñ£ù¢ õ÷¢÷¤ ªîò¢õ£¬ù»ìù¢ â¿ï¢î¼÷¤ò¤¼î¢îô¢
Þî¢îôî¢î¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£ù¢ ºî¢¶è¢°ñ£ó²õ£ñ¤ âù¢ø ï£ñî¢î¤ô¢ ܬöè¢èð¢¢ð´è¤ø£ó¢. ªð¼ñ£ù¢ è¤ö袰 «ï£è¢è¤è¢ è£ì¢ê¤ Ü÷¤è¢è¤ø£ó¢. ܲóù¢ Åóð¶ñ¬ù Üö¤è¢è ªð¼ñ£ù¢ «õô¢ ªðø¢ø¶ Þî¢îôî¢î¤ô¢î£ù¢. Þî¢îôî¢î¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¢ ñ¦¶ °ñó°¼ðóó¢ ºî¢¶è¢°ñ£ó²õ£ñ¤ ð¤÷¢¬÷î¢ îñ¤ö¢ 𣮻÷¢÷£ó¢.
õ¤÷è¢èð¢¢ð좴÷¢÷ù«õ Üù¢ø¤ ºø¢ø º®ï¢î¬õò£ù¬õ Üô¢ô. Þð¢ªð£¼í¢¬ñò¤ô¢ «ñ½ñ¢ Ýöñ£è ªõ÷¤ð¢¢ð´î¢î «õí¢®ò ªêò¢î¤è÷¢ ãó£÷ñ£è à÷¢÷ù. Þ¶ ß«ìø Ü¼íè¤ó¤ò£ó¤ù¢ õ£ó¢î¢¬îè÷¤ô¢ ªê£ô¢ô «õí¢´ñ£ò¤ù¢ º¼èð¢ªð¼ñ£ù¤ù¢ õ¼÷¢ ¬èÃì «õí¢´ñ¢.
- www.thevaaram.org/thirumurai 4. vaaramorualayam.blogspot.com
- tamil.mywebdunia º¼è«õ÷¢ ðù¢ù¤¼ º¬ø (ªî£°î¤-2), ªïô¢«õô¤ ¬êõ ê¤î¢î£ï¢î Ëø¢ðî¤ð¢¹è¢ èöèñ¢, 1992.
ஞாயிறு, 12 ஏப்ரல், 2009
நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத்திறன்
திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் தமிழ்க் கவிஞராகவும் தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் இவருக்கென்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர் பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர். இவர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமைத் திறன்களை எடுத்துரைக்கும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.
ஆளுமைத்திறன்
நிலையாமை
நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் - என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று (நீ.நெ.வி. 1)
என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனி மனித ஆளுமைத்திறனை நன்கு எடுத்துரைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.
மனிதப் பிறவியும், இப்பிறவியில் சேர்க்கும் செல்வமும் நிலைத்து நிற்கக் கூடியது என்று மனிதர்கள் மிகவும் நம்புகிறார்கள்¢. இதனால் எப்பாடு பட்டாவது செல்வத்தைச் சேர்ப்¢பதில் முனைப்பாய் நிற்கிறார்கள். செல்வத்தைப் பெறுவதற்கு தீய வழியாய் இருந்தாலும் கூட கவலையின்றி அதனைச் செய்கிறார்கள். இதனால் தனி மனித நியாயங்கள் பறிக்கப்¢படுகின்றன. வலியவர் வாழ்வதும் எளியவர் வீழ்வதும் அன்றாடம் உலகில் அரங்கேறுகின்றன. இந்த எண்ணம் மனிதர்களிடையே
அகற்றப்பட்டு விட்டால் நாட்டில் அதர்மங்கள் பெருக வாய்ப்பில்லை. இதனை நன்கு உணர்ந்தவராக குமரகுருபரர் விளங்குகிறார்.
இதனால்தான் குமரகுருபரர், இளமைப் பருவம் நீர்க்குமிழி; மனிதனால் சேர்க்கப்¢படும் செல்வம் நீரில் எழுகின்ற அலை; மனித உடல் நீரில் எழுதப்¢படுகின்ற எழுத்து என்று தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் தனி மனித குணங்கள் மேம்படும். தனி மனித குணங்கள் மேம்பட்டால் அவன் சார்ந்த சமுதாயம் சிறப்படையும்.
கல்வி
ஒருவர் தம்முடைய கருத்தைப் பிறர்க்கு அஞ்சாது எடுத்துரைக்க வேண்டும். அதுபோல தம்மைவிட அறிவில் மிக்கார் கூடியுள்ள அவையில் ஒன்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல் அதனைப் பற்றிப் பேசுவதற்கு அஞ்ச வேண்டும். அதாவது அஞ்சத் தகுவனவற்றிற்கு அஞ்சுதலும் அஞ்சத்தகாதனவற்றிற்கு அஞ்சாதும் வாழ்தல் வேண்டும். இத்திறம் நல்ல மனிதர்களுக்குரிய ஆளுமைப் பண்பாகும்.
இதனையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (குறள்.428)
என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
செருக்கின்மை
நம்மைவிட செல்வத்தில் குறைந்தாரை நோக்கி நாம் அவர்களை விட மிகுந்த செல்வம் உடையேம் என்று மன நிறைவு கொள்ள வேண்டும். அதேவேளையில் நம்மைவிட கல்வியில் மிக்காரைப் பார்த்து நாம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எண்ணுதல் வேண்டும். இதனை விடுத்துத் தாமே செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுதல் செருக்காகும். செருக்குடையவர்கள் வாழ்வு சருக்கி விடும் என்பது குமரகுருபரரின் துணிபாகும். இதனை,
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
இவர்க்குநாம் என்று தாமே (நீ.நெ.வி. 15)
முயற்சி
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்; விதியை மதியால் வெல்லலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த முதுமொழிகளாகும். இதனை வள்ளுவரும்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள்.620)
என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் ஒருவர் பெறும் உயர்வுகளுக்கு அவர்தம் முயற்சிகளே காரணமாகின்றன.
தாம் எண்ணியதை எண்ணியாங்கு எய்த நினைக்கும் ஒருவர் தம்முடைய உடல் துன்பம், உள்ளப் பசி, தூக்கம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று குமரகுருபரர் கருதுகிறார். இதனை,
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் .......................... ..................... ................... ........................ கருமமே கண்ணாயி னார் (நீ.நெ.வி.53)
என்று இவர் குறிப்பிடுகிறார்.
தெரிந்து முயலுதல்
காலம் அறிந்தாங்கு இடமறிந்து செய்வினையின்
மூலமறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன
சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். (நீ.நெ.வி.53)
என்று நீதிநெறி விளக்கம் வுறுத்துகிறது. எனவே, தெரிந்து முயலுகின்ற ஆளுமைத்திறன் பெற்றவரால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பது புலனாகிறது.
வஞ்சகம் புரியாமை
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவது அறிவு (நீ.நெ.வி.94)
என்னும் பாடலில் குமரகுருபரர் அறிவுறுத்துகிறார். ஆதலால் நல்ல மனிதர்களாக உலகை வலம் வர விரும்புகின்ற நல்லவர்கள் வஞ்சக எண்ணமில்லா ஆளுமைப்¢பண்பு நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
சிற்றின்பம் நாடாமை
உலகில் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்கள் கெடுவதைத்தாம் மிகுதியாகப் பார்க்கிறோம். நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்கள் திருந்துதல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதனைக் குமரகுருபரரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்பாடல் இதுதான்;
சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்
மற்றினபம் யாவையும் கைவிடுவர் - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில் (நீ.நெ.வி.88)
அதாவது பேரின்பத்தை விரும்புகின்றவர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பத்தை விரும்பினார் மற்றின்பத்தை எல்லாம் கைவிடுவர்.
எனவே சிற்றின்பத்தை விரும்பாது வாழ்தல் என்பது தனி மனித ஆளுமைத் திறனாகக் கொள்ளலாம். இதனைத்தான் வள்ளுவரும் சிற்றினஞ்சேராமை என்று வலியுறுத்துகிறார்.
நயத்தகு நாகரிகம்
ஒருவன் தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தல் வேண்டும். செய்வதைச் சொல்ல வேண்டும். சொல்வதைச் செய்தல் வேண்டும். ஆனால் சிலர் தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று வாய்ச்சவடால் பேசுவர். செய்தற்கு அரிதினும் அரிதான காரியங்களைத் தான் செய்து முடிப்பேன் என்று கூறிவிட்டு அதனைச் செயலில் காட்டாமல் பேச்சளவில் மட்டுமே நிற்பர். இத்தகையோரை நாகரிகமற்றவர்கள் என்று நாகரிகமாகச் சாடுகிறார் குமரகுருபரர். எனவே, மனிதர்கள் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழும் நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.
பிறன்மனை நயவாமை
ஆண்மை என்றால் வீரம் என்று பொருள். பேராண்மை என்றால் பெரிய வீரம என்று பொருளாகும். பிறன் மனை நோக்காத் தன்மையே பேராண்மை என்பது வள்ளுவம். இதனை,
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்.148)
என்னும் திருக்குறள் சுட்டுகிறது. இதனை நீதிநெறி விளக்கமும் வலியுறுத்துகிறது. பிறன்மனை விரும்பிச் செல்வான் உடலும் உள்ளமும் நடுக்கமுற்றுத் தீரா நோயுறுவான் என்று நீதிநெறி விளக்கம் (நீ.நெ.வி.77) எச்சரிக்கை செய்கிறது.
ஈகையும் இன்சொல்லும்
ஒருவர் தம்மிடமிருக்கும் பொருளை ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து வழங்குதல் வேண்டும். அங்ஙனம் வழங்குதல் மிகுந்த இன்பத்தைத் தரவல்லது. பிறருக்கு வேண்டுவனவற்றை வழங்காமல் தம்மிடம் உள்ள பொருட்செல்வத்தை இழப்¢பவர்கள் அதனால் ஏற்படும் இன்பத்தை அறியாதவர்களாவர். இதனை,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இதனைக் குமரகுருபரர், ஈயாக் குணம் கொண்ட செல்வந்தரின் செல்வத்தைக் காட்டிலும் ஈயும் குணம் கொண்டவரின் வறுமை மேலானது என்று ஈகையின் பெருமையை எடுத்துரைக்கிறார். இதனை,
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல............ (நீ.நெ.வி.67)
எனனும் வரிகள் தௌ¤வுறுத்துகின்றன.
பிறருக்குப் பொருள் கொடுத்து உதவும்பொழுது இனிய சொற்களைக் கூறி அளித்திடல் வேண்டும். அதாவது முகமலர்ச்சியோடு வழங்குதல் வேண்டும். ஈகை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது இன்சொல் கூறுதலும் ஆகும். ஒருவேளை ஈகை செய்ய முடியாமல் போனால் இனிய சொற்களையாவது கூறுதல் வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில்,
ஈகை யரிதெனினும் இன்சொளினும் நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிதம்மா ...... (நீ.நெ.வி.68)
என்னும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. எனவே, ஈகையும், இன்சொல் கூறலும் தனி மனித ஆளுமை வளர்ச்சியில் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
எனவே, குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் தனிமனித ஆளுமைப் பண்புகளை மிகுதியும் எடுத்துரைத்துள்ளமையைக் காண முடிகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தாக்கங்களைத் தொகுத்து நோக்குங்கால்அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்;
• மனம், மொழி, மெய்களால் தீமை செய்யாதிருக்க வேண்டும்
• தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்
• பயன் சிறிதாயினும் விடா தொடர் முயற்சி செய்தல் வேண்டும்
• எண்ணித் துணிதல் வேண்டும்
• கருமமே கண்ணாயிருக்க வேண்டும்
• பிறரின் சிறிய குணங்களை இகழாது அவர்களின் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்
• நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாதிருக்க வேண்டும்
• தன்மானத்தை விற்றுப் பொருள் ஈட்டாதிருக்க வேண்டும்
• ஒருவனுக்கு ஒருத்தி என்று உண்மையாய் வாழ வேண்டும்
இவற்றைப் பின்பற்றி மானிட சமுதாயம் வாழத் தலைப்¢படுகின்ற பொழுது வீடும் நாடும் ஒருசேர உயரும் என்பது திண்ணம்.
நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத்திறன்
சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் தமிழ்க் கவிஞராகவும் தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் இவருக்கென்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர் பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர்.
இவர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமைத் திறன்களை எடுத்துரைக்கும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.
ஆளுமைத்திறன்
நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 75 பாடல்கள் தனி மனித ஆளுமைகளை எடுத்துரைக்கும் தன்மையில் அமைந்துள்ளன.(காண்க; ‘நீதிநெறி விளக்கத்தில் தனிமனித நீதிகள்’, குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 1, ப. 254.) அதாவது தனி மனிதனுக்குரிய நீதிகளை எடுத்துரைத்து அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்க இந்நூல் முயல்கிறது.
நிலையாமை
நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் - என்னேவழுத்தாதது எம்பிரான் மன்று (நீ.நெ.வி. 1)
என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனி மனித ஆளுமைத்திறனை நன்கு எடுத்துரைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.
மனிதப் பிறவியும், இப்பிறவியில் சேர்க்கும் செல்வமும் நிலைத்து நிற்கக் கூடியது என்று மனிதர்கள் மிகவும் நம்புகிறார்கள்¢. இதனால் எப்பாடு பட்டாவது செல்வத்தைச் சேர்ப்¢பதில் முனைப்பாய் நிற்கிறார்கள். செல்வத்தைப் பெறுவதற்கு தீய வழியாய் இருந்தாலும் கூட கவலையின்றி அதனைச் செய்கிறார்கள். இதனால் தனி மனித நியாயங்கள் பறிக்கப்¢படுகின்றன. வலியவர் வாழ்வதும் எளியவர் வீழ்வதும் அன்றாடம் உலகில் அரங்கேறுகின்றன. இந்த எண்ணம் மனிதர்களிடையே
-2-
அகற்றப்¢பட்டு விட்டால் நாட்டில் அதர்மங்கள் பெருக வாய்ப்பில்லை. இதனை நன்கு உணர்ந்தவராக குமரகுருபரர் விளங்குகிறார்.
இதனால்தான் குமரகுருபரர், இளமைப் பருவம் நீர்க்குமிழி; மனிதனால் சேர்க்கப்¢படும் செல்வம் நீரில் எழுகின்ற அலை; மனித உடல் நீரில் எழுதப்¢படுகின்ற எழுத்து என்று தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் தனி மனித குணங்கள் மேம்படும். தனி மனித குணங்கள் மேம்பட்டால் அவன் சார்ந்த சமுதாயம் சிறப்¢படையும்.
கல்வி
தனி மனித ஆளுமை வளர்ச்சியில் மிகவும் இன்றியமையாத பங்கெடுப்¢பது கல்வியாகும். இதனை நன்கு உணர்ந்த குமரகுருபரர் கல்வியின் சிறப்பு, பயன், கல்லாமையின் இழிவு, கல்வியைக் காசாக்குவோர் நிலை ஆகியன பற்றி 25 பாடல்களில் விரிவாகப் பேசுகிறார். இதனால்தான் கல்வியைச் ‘சிற்றுயிர்க்கு உற்ற துணை’ (நீ.நெ.வி. 2) என்றும், கற்புடைய மனைவி, செல்வப் புதல்வன் (நீ.நெ.வி. 4) என்றும் இவர் குறிப்பிடுகிறார்.
ஒருவர் தம்முடைய கருத்தைப் பிறர்க்கு அஞ்சாது எடுத்துரைக்க வேண்டும். அதுபோல தம்மைவிட அறிவில் மிக்கார் கூடியுள்ள அவையில் ஒன்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல் அதனைப் பற்றிப் பேசுவதற்கு அஞ்ச வேண்டும். அதாவது அஞ்சத் தகுவனவற்றிற்கு அஞ்சுதலும் அஞ்சத்தகாதனவற்றிற்கு அஞ்சாதும் வாழ்தல் வேண்டும். இத்திறம் நல்ல மனிதர்களுக்குரிய ஆளுமைப் பண்பாகும். இதனையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் (குறள்.428)
என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
செருக்கின்மை
ஒருவர் அனைத்திலும் தாமே மேலானவர் என்று செருக்குக் கொள்ளுதல் அழிவிற்கு வித்தாகும். எனவே வாழப் பிறந்த மனிதர்கள் செருக்கற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
நம்மைவிட செல்வத்தில் குறைந்தாரை நோக்கி நாம் அவர்களை விட மிகுந்த செல்வம் உடையேம் என்று மன நிறைவு கொள்ள வேண்டும். அதேவேளையில் நம்மைவிட கல்வியில் மிக்காரைப் பார்த்து நாம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எண்ணுதல் வேண்டும். இதனை விடுத்துத் தாமே செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுதல் செருக்காகும். செருக்குடையவர்கள் வாழ்வு சருக்கி விடும் என்பது குமரகுருபரரின் துணிபாகும். இதனை,
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்எற்றே இவர்க்குநாம் என்று. தாமே (நீ.நெ.வி. 15)
-3-
முயற்சி
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்; விதியை மதியால் வெல்லலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த முதுமொழிகளாகும். இதனை வள்ளுவரும்,
ஊழையும் உப்¢பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (குறள்.620)
என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் ஒருவர் பெறும் உயர்வுகளுக்கு அவர்தம் முயற்சிகளே காரணமாகின்றன.
தாம் எண்ணியதை எண்ணியாங்கு எய்த நினைக்கும் ஒருவர் தம்முடைய உடல் துன்பம், உள்ளப் பசி, தூக்கம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று குமரகுருபரர் கருதுகிறார். இதனை,
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் .......................... ..................... ................... ........................ கருமமே கண்ணாயி னார் (நீ.நெ.வி.53)
என்று இவர் குறிப்பிடுகிறார்.
தெரிந்து முயலுதல்
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றாலும்கூட ஒன்றைச் செய்ய முயல்வதற்கு முன்பு அச்செயலைச் செய்வதற்குரிய காலம், இடம், காரணம், பயன் ஆகியவற்றை ஆராய்ந்து ஈடுபடுதல் இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற இயலும். இதனை,
காலம் அறிந்தாங்கு இடமறிந்து செய்வினையின் மூலமறிந்து விளைவறிந்து - மேலும்தாம்சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்துஆள்வினை ஆளப் படும். (நீ.நெ.வி.53)
என்று நீதிநெறி விளக்கம் தௌ¤வுறுத்துகிறது. எனவே, தெரிந்து முயலுகின்ற ஆளுமைத்திறன் பெற்றவரால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பது புலனாகிறது.
வஞ்சகம் புரியாமை
மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும் வஞ்சித்தும் வாழத்தலைப்¢படுகின்றனர். இது மிகவும் கொடிய செயலாகும். இங்ஙனம் வஞ்சித்தொழுகுவாரை மதியற்றவர்கள் என்று குமரகுருபரர் சாடுகிறார். பிறரை வஞ்சித்து வாழ்கின்றவர்களுக்கு அப்பொழுது வேண்டுமானால் ஒருவரை வஞ்சித்து விட்டோம் என்ற உணர்வு மேலிடலாம். இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே ஆகும். ஒருவர் பிறரை ஏமாற்றுவதையும் வஞ்சிப்¢பதையும் கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார். எனவே அதற்கான தண்டனைக் கிடைக்கப்பெற்றேத் தீரும் என்பதை,-4-
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்வஞ்சித்தோம் என்று மகழன்மின் - வஞ்சித்தஎங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சிஅங்கம் குலைவது அறிவு (நீ.நெ.வி.94)
என்னும் பாடலில் குமரகுருபரர் அறிவுறுத்துகிறார். ஆதலால் நல்ல மனிதர்களாக உலகை வலம் வர விரும்புகின்ற நல்லவர்கள் வஞ்சக எண்ணமில்லா ஆளுமைப்¢பண்பு நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
சிற்றின்பம் நாடாமை
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது பழமொழி. இதன்பொருள் நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்களும் நல்லவர்காளாவர் என்பதாகும். பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது மற்றொரு பழமொழி. இதன்பொருள் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்களும் தீயவர்காளாகி விடுவர் என்பதாகும்.
உலகில் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்கள் கெடுவதைத்தாம் மிகுதியாகப் பார்க்கிறோம். நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்கள் திருந்துதல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதனைக் குமரகுருபரரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்பாடல் இதுதான்;
சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்மற்றினபம் யாவையும் கைவிடுவர் - முற்றுந்தாம்பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோபாரின்பப் பாழ்ங்கும்பி யில் (நீ.நெ.வி.88)
அதாவது பேரின்பத்தை விரும்புகின்றவர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பத்தை விரும்பினார் மற்றின்பத்தை எல்லாம் கைவிடுவர்.
எனவே சிற்றின்பத்தை விரும்பாது வாழ்தல் என்பது தனி மனித ஆளுமைத் திறனாகக் கொள்ளலாம். இதனைத்தான் வள்ளுவரும் சிற்றினஞ்சேராமை என்று வலியுறுத்துகிறார்.
நயத்தகு நாகரிகம்
ஒருவன் தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தல் வேண்டும். செய்வதைச் சொல்ல வேண்டும். சொல்வதைச் செய்தல் வேண்டும். ஆனால் சிலர் தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று வாய்ச்சவடால் பேசுவர். செய்தற்கு அரிதினும் அரிதான காரியங்களைத் தான் செய்து முடிப்பேன் என்று கூறிவிட்டு அதனைச் செயலில் காட்டாமல் பேச்சளவில் மட்டுமே நிற்பர். இத்தகையோரை நாகரிகமற்றவர்கள் என்று நாகரிகமாகச் சாடுகிறார் குமரகுருபரர். எனவே, மனிதர்கள் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழும் நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.
-5-
பிறன்மனை நயவாமை
ஆண்மை என்றால் வீரம் என்று பொருள். பேராண்மை என்றால் பெரிய வீரம என்று பொருளாகும். பிறன் மனை நோக்காத் தன்மையே பேராண்மை என்பது வள்ளுவம். இதனை,
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்.148)
என்னும் திருக்குறள் சுட்டுகிறது. இதனை நீதிநெறி விளக்கமும் வலியுறுத்துகிறது. பிறன்மனை விரும்பிச் செல்வான் உடலும் உள்ளமும் நடுக்கமுற்றுத் தீரா நோயுறுவான் என்று நீதிநெறி விளக்கம் (நீ.நெ.வி.77) எச்சரிக்கை செய்கிறது.
ஈகையும் இன்சொல்லும்
ஒருவர் தம்மிடமிருக்கும் பொருளை ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து வழங்குதல் வேண்டும். அங்ஙனம் வழங்குதல் மிகுந்த இன்பத்தைத் தரவல்லது. பிறருக்கு வேண்டுவனவற்றை வழங்காமல் தம்மிடம் உள்ள பொருட்செல்வத்தை இழப்¢பவர்கள் அதனால் ஏற்படும் இன்பத்தை அறியாதவர்களாவர். இதனை,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இதனைக் குமரகுருபரர், ஈயாக் குணம் கொண்ட செல்வந்தரின் செல்வத்தைக் காட்டிலும் ஈயும் குணம் கொண்டவரின் வறுமை மேலானது என்று ஈகையின் பெருமையை எடுத்துரைக்கிறார். இதனை,
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்நல்குரவே போலும் நனிநல்ல............ (நீ.நெ.வி.67)
எனனும் வரிகள் தௌ¤வுறுத்துகின்றன.
பிறருக்குப் பொருள் கொடுத்து உதவும்பொழுது இனிய சொற்களைக் கூறி அளித்திடல் வேண்டும். அதாவது முகமலர்ச்சியோடு வழங்குதல் வேண்டும். ஈகை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது இன்சொல் கூறுதலும் ஆகும். ஒருவேளை ஈகை செய்ய முடியாமல் போனால் இனிய சொற்களையாவது கூறுதல் வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில்,
ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்ஓஓ கொடிது கொடிதம்மா ...... (நீ.நெ.வி.68)
என்னும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. எனவே, ஈகையும், இன்சொல் கூறலும் தனி மனித ஆளுமை வளர்ச்சியில் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
-6-
எனவே, குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் தனிமனித ஆளுமைப் பண்புகளை மிகுதியும் எடுத்துரைத்துள்ளமையைக் காண முடிகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தாக்கங்களைத் தொகுத்து நோக்குங்கால்அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்;
• மனம், மொழி, மெய்களால் தீமை செய்யாதிருக்க வேண்டும்• தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்• பயன் சிறிதாயினும் விடா தொடர் முயற்சி செய்தல் வேண்டும்• எண்ணித் துணிதல் வேண்டும்• கருமமே கண்ணாயிருக்க வேண்டும்• பிறரின் சிறிய குணங்களை இகழாது அவர்களின் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்• நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாதிருக்க வேண்டும்• தன்மானத்தை விற்றுப் பொருள் ஈட்டாதிருக்க வேண்டும்• ஒருவனுக்கு ஒருத்தி என்று உண்மையாய் வாழ வேண்டும்
இவற்றைப் பின்பற்றி மானிட சமுதாயம் வாழத் தலைப்¢படுகின்ற பொழுது வீடும் நாடும் ஒருசேர உயரும் என்பது திண்ணம்.
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009
குடந்தைக் கல்லூரி
முனைவர் மு.இளங்கோவன் - Muelangovan மதியம் வெள்ளி, பிப்ரவரி 20, 2009 தமிழ்மணம் பரிந்துரை : 0/0
Pathivu Toolbar ©2009thamizmanam.com
குடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் பற்றிய என் உரை...
குடந்தை(கும்பகோணம்)க் காவிரிக்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தில்(பாலக்கரை) நான் பேருந்திலிருந்து இறங்கும்பொழுது மணி பகல் ஒன்றிருக்கும்.பேராசிரியர் க.துரையரசன் அவர்கள் என்னை அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடு செய்திருந்தார்.ஐந்து மணித் துளிகளில் கல்லூரி அண்ணா கலையரங்கை அடைந்தேன்.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாசுகர் அவர்கள் கணிப்பொறி,இணையம் பற்றிய பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்.பசி நேரத்திலும் மாணவர்கள் அதனை ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.பேச்சின் நிறைவில் சில வினாக்களைப் பார்வையாளர்கள் எழுப்பினர்.அதில் ஒரு வினா தமிழ் 99 விசைப் பலகையைப் பயன்படுத்துவது எவ்வாறு?. நேரம் கருதி பிறகு விளக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகலுணவுக்கு 1.45 மணிக்குப் புறப்பட்டோம்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கல்லூரியிலேயே உணவு ஆயத்தம் செய்து வழங்கினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு அனைவரும் அரங்கிற்கு வந்தனர்.நானும் துரை மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் 2.15 மணிக்கே அரங்கிற்கு வந்து கணிப்பொறி,இணைய இணைப்புகளைச் சரிசெய்து தேவையான மென்பொருள்கள், இணையத்தளங்களை இறக்கி,ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்.
நான் பேசவேண்டிய தலைப்பு மின் நூல்கள் என்றாலும் 15 மணித்துளிகளுக்குத் தமிழில் தட்டச்சுச்செய்யும் முறைகளை விளக்கி தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பு,அதனை எவ்வாறு இயக்குவது என்ற விவரங்களை அவைக்குச் சொன்னதும் அவையினர் எளிமையாக என் உரையை உள்வாங்கி மகிழ்ந்தனர்.இவ்வாறு தமிழில் தட்டச்சுச்செய்தால் மிக எளிதாக மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் வலைப்பூ உருவாக்கவும் முடியும் என்று சொன்னேன்.
மாதிரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அப்பொழுது முனைவர் கண்ணன்(கொரியா)யுவராசு(சென்னை) குணசீலன்(திருச்செங்கோடு), திருவாளர் அறிவழகன்(சென்னை) முகுந்து(பெங்களூர்) உள்ளிட்ட அன்பர்கள் இணைப்பில் இருந்தனர்.அனைவரும் இணைப்பில் வந்து உரையாடினர்.மாணவர்கள் இது கண்டு மகிழ்ந்தனர்.இப்பொழுது தமிழ்99 விசைப்பலகை அறிமுகம் ஆனது.99 விசைப்பலகையை தமிழா.காம் சென்று பதிவிறக்கம் செய்யும் முறையை எடுத்துரைத்தேன். என்.ச்.எம். நிறவனத்தின் விசைப்பலகையின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தேன்.அப்பொழுது யுனிகோடு என்ற ஒருங்குகுறி பற்றியும் எடுதுரைத்தேன்.முகுந்து அவர்களின் பங்களிப்பு,கோபி அவர்களின் மென்பொருள்கள் பற்றியும் அறிமுகம் செய்தேன்.
அடுத்து எனக்கு வழங்கப்பட்ட மின்நூல்கள் என்ற தலைப்புக்குச் சென்றேன்.
தமிழில் நூல்கள் வாய்மொழியாகவும் கல்வெட்டு,செப்பேடு,பனை ஓலைகள், நுண்படச் சுருள்கள் வழியாகவும் வளர்ந்து இன்று மின்நூல்கள் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினேன்.
திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பக்கத்திற்குச் சென்று பல நூல்களைத் தரவிறக்கிப் பார்த்தோம்.அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணன்,சுபா முயற்சி பற்றி விளக்கினேன்.அத்தளத்தையும் பார்வையிட்டு அதில் உள்ள ஓலைச்சுவடிகள், படங்கள் பாதுகாப்பு பற்றி அறிமுகம் செய்தேன்.அடுத்து விருபா தளத்தின் சிறப்புப் பற்றி காட்சி விளக்கத்துடன் உரை இருந்தது.இணையப் பல்கலைக்கழகத்தின் தளம்,காந்தளகம் தளம், சென்னை நூலகம் தளம் பற்றி அறிமுகம் செய்தேன்.
புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் பற்றியும் அப்பக்கங்களுக்குச் சென்று விளக்கினேன்.மின் இதழ்கள்,பொங்குதமிழ் எழுத்துருமாற்றி பற்றியும் சுரதா தளம் பற்றியும் காட்சி விளக்கத்துடன் விளக்கினேன்.
விக்கிபீடியா களஞ்சியம் பகுதிக்குச் சென்று தமிழ்க்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளளதை எடுத்துரைத்தேன்.என் கட்டுரைகள் சிலவற்றையும் அவைக்கு அறிமுகப்படுத்தி இதுபோன்ற தேவையான கட்டுரைகளை அனைவரும் வலைப்பூக்கள் உருவாக்கி வெளியிடும்படி வேண்டுகோள் வைத்தேன்.
வலைப்பூ உருவாக்கத்தின் சிறப்புப்பற்றி சிறிய அளவில் அறிமுகம் செய்துவிட்டு இவ்வலைப்பூ உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைத்தால் உலக அளவில் நம் படைப்புகளை அறிமுகம் செய்ய முடியும் எனக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன்.நண்பர் காசி ஆறுமுகம் அவர்களின் பணியையும் அமெரிக்காவில் உள்ள திருவாளர்கள் நா.கணேசன், சங்கராபண்டியனார்,சௌந்தர்,தமிழ் சசி உள்ளிட்ட தமிழ்மண நிருவாகிகளின் பணிகளையும் எடுத்துரைத்தேன்.சற்றொப்ப ஒன்றே முக்கால் மணிநேரம் என் உரை அமைந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி பிசப் ஈபர் கல்லூரி. தேசியக்கல்லூரி, வளனார் கல்லூரி புதுக்கோட்டை மகளிர் கல்லூரி,தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி,குடந்தை மகளிர் கல்லூரி,ஆடவர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள்,ஆய்வாளர்கள் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர்கள் சி.மனோகரன்,முனைவர் சிற்றரசு,முனைவர் குணசேகரன்,முனைவர் துரையரசன்,முனைவர் சிவநேசன்,முனைவர் காளிமுத்து முனைவர் துரை.மணிகண்டன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்ந்தேன்.என் மாணவர்(கலவை ஆதிபராசக்திக் கல்லூரியில் பயின்றவர்) தேவராசன் என்பவர் குடந்தைக் கல்லூரியில் முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் படிப்பவர் வந்திருந்து என்னை அன்புடன் கண்டு உரையாடினார்.அனைவரின் ஒத்துழைப்பாலும் என் உரை சிறப்பாக அமைந்தது.
அடுத்த பயிலரங்குகளில் சந்திப்போம் என்று அனைவரிடமும் விடைபெற்று, குடந்தையில் உடல்நலமின்றி உள்ள ஐயா கதிர். தமிழ்வாணன் அவர்களை இல்லம் சென்று கண்டு வணங்கி, இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டேன்.இரவு 11 மணிக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம் லேபிள்கள்: குடந்தைக் கல்லூரி, மின் நூல்கள்