சனி, 17 செப்டம்பர், 2016

திரட்டிகள்: இதற்கு மேலும்…..

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 9,10,11-2016 ஆகிய நாள்களில் நடைபெற்ற 15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பெற்ற கட்டுரை

திரட்டிகள்: இதற்கு மேலும்…..
முனைவர் க.துரையரசன்
தமிழ் இணைப்பேராசிரியர்
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம் – 612 002.
மின்னஞ்சல்: darasan2005@yahoo.
                                 darasan2006@gmail.com
ஆய்வுச்சுருக்கம்:
தமிழ் வலைப்பூக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றில் சிலவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் தரும் பணியைத் திரட்டிகள் சேவை நோக்கில் செய்து வருகின்றன. அவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் இதுவரை அவை செய்த பணிகள், இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பருந்து நோக்குப் பார்வையில் இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.
காலத்தின் கட்டாயம்:
 ‘ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாததுஎன்பார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி. இதனடிப்படையில் இன்றைய தலைமுறையினர் இணையத்தைப் பயன்படுத்தி ருகின்றனர். இணையப் பயன்பாடு காலத்தின் கட்டாயம்.  தமிழறிஞர்கள், தமிழாய்வாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைக் கட்டுரைகளாகவும், செய்தித் துணுக்குகளாகவும் வலைப்பூக்களில்  பதிவிட்டு வருகின்றனர்.
திரட்டிகள்:
தமிழில் வலைப்பூக்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகி வருகின்றன. இது மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு வளர்ச்சி நிலையாகும். பல்கியும் பரவியும் கிடக்கும் இவற்றை இணைய வாசிப்பாளர்களுக்கு ஓரிடத்தில் தொகுத்துத் தரும் பணியைத் திரட்டிகள் செய்து வருகின்றன. இதனால் இணைய வாசிப்பாளர்களுக்கு வலைப்பூக்களைக் கண்டறிந்து வாசிப்பது எளிதாகிறது.
திரட்டியின் வகைகள்:
திரட்டிகளைப் பொறுத்தவரையில் இரண்டு விதமாக செயல்படுகின்றன.            ஒன்று, வலைப்பூக்களைத் தானாகவே தேடித் தருவன; மற்றொன்று, பதிவர் பதிவு செய்து கொண்ட பின்பு வலைப்பூக்களைத் தேடித் தருவன. இதில், தானாகத் திரட்டும் திரட்டிகள், வலைப்பூவினை இணைக்கத் தமது திரட்டி முகவரியை அளிக்கின்றன. இதன்மூலம் புதிய பதிவுகள் திரட்டியில் தெரியவருகின்றன. பதிவு செய்த பின்பு செய்திகளைக் காட்டும் திரட்டிகள், வலைப்பூவின் இடுகைகளைத் திரட்டியில் பதிவு செய்த பிறகுதான் திரட்டியில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க திரட்டிகளும் அவற்றின் முகவரிகளும்:
            தமிழ்.கணிமை.காம்             -           www.tamil.kanimai.com
            தமிழ் மணம்                          -           www.tamilmanam.net
            தமிழ்வெளி                            -           www.tamilveli.com
            தமிழ்ப்பதிவுகள்                    -           www.tamilblogs.com
தமிழ்பாரதி                            -           www.thamizhbharathi.com
தமிழ் BM                                 -          www.tamilbm.com
            திரட்டி                                                -           www.thiratti.com
            தேன்கூடு                               -           www.thenkoodu.com
நம்குரல்                                   -          www.namkural.com
மகளிர்கூடல்                                      -          www.magalirkoodal.com
            டெக்னோரட்டி                     -           www.technorati.com
வலைச்சரம்                             -          www.blogintamil.blogspot.in
வலைப்பூக்கள்                         -         www.valaipookal.in
            வேர்ட்பிரஸ்                          -           www.ta.wordpress.com
            மாற்று                                                -           www.maatru.net
            கில்லி                                     -           www.gilli.in
ஸ்னாப் ஜட்ஜ்                       -           www.snapjudge.blogspot.com

திரட்டியின் செயற்பாடுகள்:
இவற்றில் தமிழ் மணம், தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி, தேன்கூடு ஆகியனத் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் வலைப்பூக்களைத் திரட்டுகின்றன. வாசகர்களால் நல்ல பதிவுகளாக அடையாளம் காட்டப்படுகின்ற பதிவர்களின் வலைப்பூக்களைத் தேடித்திரட்டும் பணியை ‘மாற்று’  மேற்கொள்கிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரும் வலைப்பதிவுகளைத் தேர்ந்து திரட்டுகின்ற பணியை ‘கில்லி’ மேற்கொள்கிறது.
வாரம் ஓர் ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது ‘வலைச்சரம்’ என்னும் திரட்டி. தனியொருவராகத் தினந்தோறும் தான் படிப்பதில் தேவையற்றதை விலக்கி நல்லவற்றைத் தொகுக்கிறார் ஸ்னாப் ஜட்ஜ்.
மேற்கண்ட அனைத்துத் திரட்டிகள், திரட்டிகளின் சாரம் ஆகியவற்றை ஒரே தொகுப்பாகத் தந்து அனைத்துத் தமிழ் வலைப்பதிவுகளின் புதிய பதிவுத் தலைப்புகளைத் ‘தமிழ்.கணிமை.காம்’ திரட்டுகிறது.
செய்திகளைக் கண்டறிவதில் சிக்கல்:
தமிழ் மொழியில் அமைந்துள்ள வலைப்பூக்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியைத் தாங்கியவாறு தொடர்ந்து வெளிவருவதில்லை. வலைப்பூக்களின் உள்ளடக்கம் தனித்தப் பொருண்மையுடையதாக இல்லாமல் கலப்புப் பொருண்மை உடையதாகவே உள்ளன. ஆதலால் குறிப்பிடத்தக்க செய்தியைக் காண அதற்குரிய வலைப்பூவை இனங்காண முடியவில்லை. ஒவ்வொரு வலைப்பூக்களாகப் பார்த்துப் பார்த்துதான் வேண்டிய செய்திகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் வலைப்பூக்கள் பெருகியிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இச்சிக்கல் களையப்படாவிட்டால் வலைப்பூக்களால் பெரிய நன்மைகள் கிட்டாது.
 ஒரு குறிப்பிட்ட செய்தியைக் (இலக்கணம், புதுக்கவிதை என்பது போல) கொண்டு வலைப்பூக்கள் அமைவதில்லை. மாறாகப் பல்சுவைப் பொருண்மையிலேயே பெரும்பாலான வலைப்பதிவர்கள் பதிவிடுகிறார்கள். எனவே வலைப்பதிவுகளைப் பொழுதுபோக்கு நிலையில் பயன்படுத்தும் தன்மைதான் மிகுந்திருக்கிறதே ஒழிய அறிவுப் பூர்வமானப் பயன்பாட்டு நிலைக்கு உகந்ததாக இல்லை.  
திரட்டிகள் – இதுவரை:
இந்நாள் வரை திரட்டிகள் மேற்கூறியவாறு தானாகவோ அல்லது வலைப்பதிவர்களின் தன்முனைப்பானப் பதிவிற்குப் பிறகோ வலைப்பூக்களைத் திரட்டுகின்ற பணியை மட்டுமே செய்கின்றன. இதனால் இணைய வாசிப்பாளர்களுக்கு வலைப்பூக்களைப் பார்ப்பதும் படிப்பதும் சற்று எளிதாகிறது என்பது உண்மைதான். ஆனால் வலைப்பூக்களை திரட்டுவதைத் தவிர குறிப்பிட்டத்தக்க ஆக்கப்பூர்வமான வேறு பணிகளை திரட்டிகள் செய்யவில்லை (மேற்காட்டிய சில திரட்டிகளைத் தவிர).
திரட்டிகள் – இன்னும்:
1. திரட்டிகள் தமிழ் வலைப்பூக்களைத் திரட்டுவதோடு அவற்றை வகைப்படுத்தவும்  வேண்டும். சான்றாக இலக்கியம், சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், மரபுக் கவிதை, புதுக்கவிதை, இலக்கணம்,  கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீகம், தொழில்நுட்பம் என்பன போன்று வகைப்படுத்திக் கொடுத்தால் பயன்பாட்டுக்கு எளிமையாக இருக்கும்.
2. ஒரு திரட்டியில் வேண்டிய செய்திகளைத் தேடிப் பெறுகிற வகையில் தேடுதல் வசதியையும் அவை ஏற்படுத்தித் தரவேண்டும். அதுபோல ஒரு செய்திக்குத் தொடர்புடைய செய்திகளையும் காட்டுமாறும் ஒரு பொருள் குறித்தப் பதிவுகள் ஒன்றாகத் தொகுக்கப்படுமாறும் திரட்டிகள் செயற்பட்டால் சிறப்பாக இருக்கும்.
3. வேண்டிய பகுதியையோ அல்லது முழுக் கட்டுரையையோ அச்சிடுவதற்கான வசதியையும் திரட்டிகள் வழங்க வேண்டும்.
4. சிறந்த வலைப்பதிவிற்கு (அ) வலைப்பதிவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் தரவேண்டும்.
5. ஒரு திரட்டியில் ஒரு செய்தி திரட்டப்பட்டுவிட்டால் அச்செய்தி வேறு எத்திரட்டியிலும் தொகுக்கப்படாதவாறு தடுக்கப்பெற வேண்டும்.
6. பல திரட்டிகள் தொடர்ந்து புதுப்பிக்கபடாமலோ அல்லது செயற்படாமலோ உள்ளன.  அவ்வாறில்லாமல் திரட்டிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
முடிவுகள்:
1. வலைப்பூக்களைத் திரட்டுகின்ற பணியை மட்டும் திரட்டிகள் மேற்கொள்ளக் கூடாது.
2. திரட்டிகளை வகைப்படுத்த வேண்டும்.
3. அவற்றின் தரம், தகுதி ஆகியவற்றை மதிப்பிட்டு அறிவிக்க வேண்டும்.
4. தேடுதல் வசதி வேண்டும்.
5. தொடர்ந்து செயற்பட வேண்டும்.
பயன்பட்டவை:

1. முனைவர் க.துரையரசன்,  ‘தமிழ்மொழி வளர்ச்சியில் வலைப்பதிவர்களின் பங்களிப்பு’ என்னும்  
     பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் குறுந்திட்ட ஆய்வுக்கட்டுரை.
2.  முனைவர் மு.பழனியப்பன், கணினியும் இணையமும், மீனாட்சி நூலக வெளியீடு, புதுக்கோட்டை -  
     622 003.
3. முனைவர் மு. பழனியப்பன், எஸ். ரவிச்சந்திரன், இணைய உலகம், பாமா பதிப்பகம், சென்னை - 24,  
   முதல் பதிப்பு 2005.
4. முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், கௌதம் பதிப்பகம், சென்னை –
    600 050,  முதல் பதிப்பு 2010.
5. முனைவர் க. துரையரசன்,  இணையமும் இனிய தமிழும், இசை பதிப்பகம், கும்பகோணம் - 612 001,
    முதல் பதிப்பு 2009.
6. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திரட்டிகள்



ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தமிழாய்வில் இணையப் பயன்பாடு

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் இணையத்தமிழ் என்னும் பொருண்மையிலானக் கருத்தரங்கு 31-03-2016 அன்று   நடைபெற்றது.         இக்கருத்தரங்கை மாண்பமை துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் அவர்கள்      தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா. இந்து  அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.   சமூக அறிவியல் துறை வளர்தமிழ்ப்புலத் தலைவர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர்  செ.சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இக்கருத்தரங்கில்   நான் பங்கேற்று, தமிழாய்வில் இணையப்பயன்பாடு என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினேன். இக்கருத்தரங்கில்    துறைக்கருத்தரங்கக்               கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அர.கமலதியாகராசன் அவர்கள் நன்றி நவின்றார். 

இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் மற்றும் தினகரன் இதழில் வெளிவந்த             செய்தி   இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.       



வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கட்டும்    அன்பு
பொங்கட்டும்     ஆற்றல்
பொங்கட்டும்     இனிமை
பொங்கட்டும்     ஈகை
பொங்கட்டும்     உவகை
பொங்கட்டும்     ஊக்கம்
பொங்கட்டும்      எளிமை
பொங்கட்டும்      ஏற்றம்
பொங்கட்டும்      ஐக்கியம்
பொங்கட்டும்     ஒற்றுமை
பொங்கட்டும்     பரவசம்
பொங்கட்டும்     புதுமை
பொங்கட்டும்     பெருமை
பொங்கட்டும்     மகிழ்ச்சி
பொங்கட்டும்     மங்கலம்


பொங்கட்டும்      பொங்கல்




சனி, 22 மார்ச், 2014

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்



மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்

( 10/03/2014 திங்கட்கிழமை அன்று புனித வளனார் கல்லூரியில் நடைபெற்ற செம்மொழிக் கருத்தரங்கில் ஆற்றிய உரை )


கருத்துரை – சுருக்கம்

மின்–ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்பது பொதுப்பொருண்மை. இதில் மின்–ஊடகங்களில் குறிப்பாக இணையதளங்களில் சிலப்பதிகாரம் பற்றி கிடைக்கும்  செய்திகளைச் சுட்டிக் காட்டி விளக்கப்படுகிறது.  கூகிள் தேடுபொறியில் சென்று சிலப்பதிகாரம் என்று தட்டச்சுச் செய்து தேடினால் 0.29 வினாடிகளில் 1,26,000 முடிவுகள் கிடைக்கின்றன.

இணையதளங்களில் காணலாகும் சிலப்பதிகாரச் செய்திகளைக் கீழ்க்கண்டவாறு பகுத்துரைக்கலாம்.

1) சிலப்பதிகாரம் – நூல்கள் கிடைக்குமிடங்கள்

2) சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைகள் வெளிவந்த தளங்கள்

3) சிலப்பதிகாரம் குறித்த வலைப்பூக்கள்

4) விக்கிபீடியாவில் சிலப்பதிகாரம்

5) த.இ.க.க. இல் சிலப்பதிகாரம்

6) சிலப்பதிகாரத்திற்கானப் படங்கள்

1) சிலப்பதிகாரம் – நூல்கள் கிடைக்குமிடங்கள்:

·         தமிழ் இணையக் கல்விக் கழகம்

·         மதுரைத்திட்டம்

·         Ex Libries Primo

·         Discovery Book Palace

·         Goodreads.com

·          

2) சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைகள் வெளிவந்த தளங்கள்:

·         இந்திரா பார்த்தசாரதி

·         தமிழ்க்களஞ்சியம்

·         இலக்கியம்.காம்

·         எழில் நிலா.காம்

·         உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்

·         தமிழ்த்தொகுப்புகள்

·         ஜெயமோகன்

·         சொல்வனம்

·          

3) சிலப்பதிகாரம் குறித்த வலைப்பூக்கள்:

·         மானிடள் (முனைவர் மு.பழனியப்பன்)

·         ஓசை செல்லா (எஸ்.இராமகிருஷ்ணன்)

·         மு.இளங்கோவன்

·         தமிழ் கிறுக்கன் (குவைத் ச.குமரன்)

·         ஐம்பெருங்காப்பியங்கள்

·         முதலூர் மண்

·         பாரதீச்சுடர்

·         சே.கல்பனா

·         க.துரையரசன்

·          

4) விக்கிபீடியாவில் சிலப்பதிகாரம்:

·         சிலப்பதிகாரம் – விக்கி மேற்கோள்

5) த.இ.க.க. இல் சிலப்பதிகாரம்:

·         நூலகம்

·         பாடங்கள் (4.1), (1.2) (2.2)

6) சிலப்பதிகாரத்திற்கானப் படங்கள்:

a) you tube

b) தமிழ் இணையக் கல்விக்கழகம் (ஓலைச்சுவடி)

 1) சிலப்பதிகாரப் பதிப்பு – உ.வே.சா. (1892)

a) http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=220&pno=702#head

b) http://www.heritagewiki.org

1) சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தின் மூலத்தை மாத்திரம்
பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீநிவாச
ராகவாசாரியரென்பவர் முன்பு பதிப்பித்திருந்தார். சேரமான் பெருமாநாயனார்
இயற்றிய  சிலப்பதிகாரம் என்று அவர் பதிப்பித்தார்.      

2) 1880 ஆம் வருஷத்தில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அக்காண்டத்தின்    மூலத்தை அடியார்க்குநல்லார் உரையோடு அச்சிட்டார்.

இரண்டு பதிப்புக்களும், அக்காலத்தில் சிலப்பதிகாரம் பாடமாக வந்தமையால் வெளியானவை. அவற்றிற் பலவகையான பிழைகள் இருந்தன. செட்டியார், கடின நடையாயுள்ளனவற்றை எளிய நடைகளாகச் செய்தும், வேண்டிய இடங்களில் விரித்துஞ் சுருக்கியும், கானல்வரிக்கு உரையின்மையால் உரையெழுதியும், அரங்கேற்று காதையுள் வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங்கள் பலவிடங்களிலும்  வருதலால் ஆங்காங்குணர இங்குச் சுருக்கியும், அச்சிட்டதாக முகவுரையில் தெரிவித்திருக்கிறார். அதனால் அடியார்க்கு நல்லாருரை முழுதும் அப்படியே அப்பதிப்பில் அமைந் திருக்கவில்லை யென்பது தெரியவரும்.அவர் மதுரைக் காண்டத்தையும் அச்சிட முயன்றும் அது நிறைவேறவில்லை.

2) சிலப்பதிகாரம் – நூல்கள்  (மூலமும் உரையும்) கிடைக்குமிடங்கள்

a) தமிழ் இணையக் கல்விக்கழகம்  www.tamilvu.org

b) மதுரைத் திட்டம் www.projectmadurai

c) சென்னை நூலகம் www.chennailibrary.com

d)  நூலகம் www.noolagam.org

a) சிலப்பதிகாரம் (நூல்கள்) 

3) சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைகள் வெளிவந்த தளங்கள்

a) சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம் - இந்திரா பார்த்தசாரதி - http://tamil.webdunia.com/miscellaneous/literature/stories/0706/02/1070602014_1.htm
b) ஐம்பெருங்காப்பியங்கள் – சிலப்பதிகாரம் - தமிழ்க்களஞ்சியம் http://www.tamilkalanjiyam.com/literatures/aimperum_kaappiyangal/silappadhikaram.html#.UxdCHs46Vho
c) சிலப்பதிகாரம் – தமிழ் இலக்கியம்

4) சிலப்பதிகாரம் குறித்த வலைப்பூக்கள்

a)  சிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும் http://manidal.blogspot.in/2012/07/blog-post_17.html

b) சிலப்பதிகாரம் பற்றி எஸ்.இராமகிருஷ்ணன் http://osaichella.blogspot.in/2007/10/blog-post_8577.html

c) சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

d) ஐம்பெருங்காப்பியங்கள் http://5bigepics.blogspot.in/p/blog-page.html

f) சிலப்பதிகாரம் - http://tamilkirukkan.wordpress.com

i) காப்பியத்தில் திருப்பு முனை: சிலப்பதிகாரத்தில் கானல் வரி
j) சிலப்பதிகார ‘வரிகள்

5) விக்கிபீடியாவில் சிலப்பதிகாரம்

a) சிலப்பதிகாரம் http://ta.wiktionary.org

c) http://ta.wikisource.org/wiki/

6) த.இ.க.க. இல் சிலப்பதிகாரம்

a) http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041221.htm

b) http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.htm

c) http://www.tamilvu.org/courses/degree/c031/c0312/html/c03121l2.htm

d) e) http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011123.htm

f) http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04114l1.htm

7) சிலப்பதிகாரத்திற்கானப் படங்கள்

a) https://www.google.co.in

c) த.இ.க.