வ.சுப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம் மன்னன்பந்தல் அன்பநாதபுரம் வகையார் கல்லூரி (ஏவிசி) தமிழ்த்துறையில் (26-28.10.2017) நடைபெற்றது. இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வில் (27.10.2017) நான் அமர்வுத்தலைவராகப் பங்கேற்றேன். கருத்தரங்க நினைவாக வ.சுப. மாணிக்கனார் பற்றி சில குறிப்புகள்:
- தோற்றம் : 17.04.1917
- பெற்றோர் : அ.சுப்பையா செட்டியார் - தெய்வானை ஆச்சி
- இயற்பெயர் : அண்ணாமலை
- மனைவி : ஏகம்மை ஆச்சி
- மகன்கள் : மூவர் - 1. தொல்காப்பியன் 2. பூங்குன்றன் 3. பாரி
- மகள்கள் : இருவர் - 1. தென்றல் 2. பொற்கொடி
- இறப்பு : 25.04.1989 (72 ஆம் அகவையில்)
- துயரம் : 6 வயதில் தாய் இறப்பு, 7 வயதில் தந்தை இறப்பு
- தாத்தா-பாட்டி (தாய்வழி) : அண்ணாமலை செட்டியார், மீனாட்சி ஆச்சி இவர்கள் வளர்ப்பில் வாழ்தல்
- பொய்சொல்லா மாணிக்கம்: 11வயதில் பர்மாவில் உள்ள ரங்கூனில் வட்டிக்கடையில் வேலைக்குச் சேர்தல் - அக்கடையின் முதலாளி, தன்னைத்தேடி ஒருவர் வருவார். அவரிடம் தான் இல்லை என்று பொய் சொல்லக்கூறுதல் - இவர் உடன்படாமை - அதனால் வேலையிழப்பு - ஊருக்குத் திரும்புதல்
- வித்துவான்: பர்மாவிலிருந்து திரும்பிய பிறகு பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் வழிகாட்டுதலின்படி அண்ணாமலைப் பல்கலையில் வித்துவான் பட்டம் (1936-40)
- பி.ஓ.எல்: சென்னைப் பல்கலைக்கழகம் (1945)
- எம்.ஓ.எல். - செ.ப.க. (1946)
- எம்.ஏ. - செ.ப.க. (1951) - தமிழில் வினைச்சொற்கள்
- முனைவர் பட்டம்: செ.ப.க. (1957) - தமிழில் அகத்திணைக் கொள்கைகள்
- பணிகள்: விரிவுரையாளர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1941 - 48
- பேராசிரியர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி - 1948 - 64
- முதல்வர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி - 1964 - 70
- தமிழ்த்துறைத் தலைவர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1970 - 77
- துணைவேந்தர் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - 1979 -82 ( ஊருக்குச் செல்ல மதுரைப் பேருந்து நிலையம் வரை பல்கலைக்கழக மகிழ்வுந்தில் வந்து பிறகு பேருந்தில் செல்வார்)
- பட்டங்கள்:
- செம்மல் - சன்மார்க்க சபை,
- மேலைச்சிவபுரி 1969 முதுபெரும்புலவர் - குன்றக்குடி ஆதீனம்
- D.Lit. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழா ஆண்டில் வழங்கப்பட்டது - 1963
- திருவள்ளுவர் விருது - தமிழக அரசு - 1994 (இறப்புக்குப் பிறகு)
- பெருந்தமிழ்க் காவலர் - ஈப்போ பாவாணர் சங்கம்
- முதுபேராய்வாளர் - திராவிட மொழியியற் கழகம்
- முது ஆராய்ச்சியாளர் - கேரளத் திராவிடமொழிக் கழகம்
- மூதறிஞர்
- தமிழ் இமயம்
- பதவிகள்:
- தமிழகப் புலவர் குழுத் தலைவர்
- பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்
- தமிழ்வழிக் கல்வி இயக்கம்
- தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர்
- தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியத் தகைஞர்
- நூல்கள்:32
- குறிப்பிடத்தக்கவை: மனைவியின் உரிமை (1947), கொடை விளக்கு (1957), தமிழ்க்காதல் (1962), தமிழ்வழிக் கல்வியாக்கம் (1988)
- சிறப்பு: ஆய்வு வன்மைக்கு: தமிழ்க்காதல், சிந்தனைத் தெளிவுக்கு: வள்ளுவம், புலமை நலத்திற்கு: கம்பர்.
- தொல்காப்பியம் பயிலாதார் அறிவு குறைபாடு உடையது.
- சங்கப் பனுவலைக்கற்றால் கிழம் போம்; கீழ்மையும் போம். (மாணிக்கக் குறள் - 461)
- குறிக்கோள் இலாத வாழ்வு கோடுகள் இலாத ஆட்டம் -நெறிக்கோள் இலாத நெஞ்சு நீறைநீர் அலாத ஆறு-மறிக்கோள் இலாத கல்வி வரப்புகள் இலாத நன்செய் - செறிக்கோள் இலாத மேனி திறவுகோல் இலாத பூட்டாம் (மாமலர்கள் - ப. 60)
- பார்வை: www.tamilheritage.org/thfcms/ www.vspmanickam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக