தேசியக் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியக் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தேசியக் கருத்தரங்கம்

தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் மையப் பொருண்மையில் மூன்று நாள் தேசியக் கருத்தரங்கம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் 9, 10,11-1-2013 ஆகிய நாட்களில் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராமசாமி அவர்கள் கருத்தரங்க நிறைவுரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் 19 பேர் கருத்துரையாளர்களாகப் பங்கேற்று கட்டுரை வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். இது குறித்த நிழற்படங்கள் மற்றும் விரிவான செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.

தேசியக்கருத்தரங்க டிஜிட்டல் ஃபிளக்ஸ்

சனி, 5 ஜனவரி, 2013

தேசியக் கருத்தரங்கம்

9,10,11-01-2013 ஆகிய மூன்று நாட்கள் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையில் தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் தேசியக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆய்வாளர்களும் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்