சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு பிறந்தது

  
புத்தாண்டு பிறந்தது
 
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள்.
இப்புத்தாண்டில் உடல் நலத்தோடும் உள்ள நலத்தோடும்
எல்லா வளமும் நிரம்பப்  பெற்று மகிழ்வோடும் நிறைவோடும்
நீடூழி வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன்.

கடந்த காலம்  உடைந்த பானை
எதிர் காலம் என்பது  மதில் மேல் பூனை
நிகழ் காலம் என்பது கையில் வீணை     


கடந்த காலக்  கசப்புகளை மறந்து 
எதிர் கால இனிப்புகளை நோக்கி 
நிகழ்கால நிஜங்களை அனுபவிப்போம்

நாம் வாழ வேண்டும் என்பது முக்கியம்
மனிதன் வாழ வேண்டும் என்பது மிக முக்கியம்
அதைவிட 
மனிதம் வாழ வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.