வெள்ளி, 2 மார்ச், 2012

இணைய தளங்களில் சிலப்பதிகாரக் கலைகள்


இணைய தளங்களில் சிலப்பதிகாரக் கலைகள்


இக்காலத்தில் நிகழ்த்தப்பெறும் எந்த ஒரு ஆய்வாக இருந்தாலும் அதில் இணையதளப் பதிவு இடம் பெறவில்லை என்றால் இன்று முழுமையுற்ற ஆய்வாகக் கருத முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தருணத்தில் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், மூவேந்தர் காப்பியம் என்றெல்லாம் புகழ்ந்து பேசப்படுகின்ற சிறப்பு மிக்க சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள கலை பற்றிய செய்திகளின் இணையதளப் பதிவுகளை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைவது பொருத்தமுடைத்து எனலாம்.
 
கூகுள் தேடு பொறியின் தமிழ்வழித் தேடுதலில் சென்று சிலப்பதிகாரம் என்று தட்டச்சுச் செய்தால் 1,11,000 முடிவுகள் கிடைக்கின்றன. சில முக்கியத் தேடல்கள் மட்டும் இங்கு சுட்டப்படுகின்றன.
நூல் தேடல்: சிலப்பதிகார நூல் மூலத்தை மட்டும் பார்க்க வேண்டுமானால் www.maduraiproject   என்ற தளத்திற்குச் சென்றால் பார்க்க முடியும். அதுபோல சிலப்பதிகாரத்தை உரையுடன் தேட விரும்பினால் தமிழ் இணையக் கல்விக்கழக இணைய தளமான www.tamilvu.org   என்ற இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும். இத்தளத்தின் நூலகப் பகுதிக்குச் சென்று காப்பிங்கள் என்ற தலைப்பில் சென்று சிலப்பதிகாரச் செய்திகளைக் காண இயலும். இத்தளத்தில் சிலப்பதிகார மூலம் மட்டுமின்றி ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் உரையும் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் உள்ள சொல் தேடுதல் வசதியால் வேண்டிய சொற்கள் இடம் பெற்றுள்ள இடங்களையும் எளிதில் கண்டறியலாம்.
சிலப்பதிகாரச் செய்திகள்: (அ) சிலப்பதிகாரம் பற்றிய செய்திகளை மேற்கண்ட www.tamilvu.org  இணைய தளத்திலேயே காண முடியும். இத்தளத்தின் பாடங்கள் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் A0111 என்ற பாடத்தொகுப்பில் A01112 சிலப்பதிகாரம் என்ற  பாடத்தில் சிலப்பதிகாரம் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இதில் சிலம்பு, இளங்கோவடிகள், கண்ணகி வழக்குரைத்தது, ஞாயிறுதிங்கள்மழை வணக்கம், மதுரை நகருக்குள் கோவலனைப் புகாதே என்று கொடிகள் கைகாட்டி வழி மறுத்தல் ஆகிய செய்திகள் பட விளக்கங்களுடன் இடம் பெற்றுள்ளன. இவை,  கற்போர்க்கும் கற்பிப்போர்க்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக உள்ளன.
     P104 பாடத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள P1041 சிலப்பதிகாரம் வழக்குரை காதை என்ற பாடத்தில் கண்ணகி சிலம்பை உடைக்கும் காட்சி வண்ண ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் சில பாடல்களையும் ஒலி (Audio) வடிவத்தில் கேட்க முடிகிறது.
     (ஆ) சொல்வனம் www.solvanam.com  என்ற மாதமிருமுறை வரும் இணைய இதழின் 52ஆவது இதழில் நாஞ்சில் நாடன் எழுதிய செந்தமிழ்க் காப்பியங்கள் என்ற கட்டுரையில் சிலப்பதிகாரக் கலைகள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
     (இ) www.sekalpana.com என்ற வலைதளத்தில் கல்பனா சேக்கிழார் எழுதிய சிலப்பதிகாரச் செய்திகள் காணக்கிடைக்கின்றன.
     (ஈ) மு.இளங்கோவனின் www.muelangovan.blogspot.com வலைதளத்தில் சிலப்பதிகாரம் உ.வே.சா.வின் முதற் பதிப்புப் படங்கள் கிடைக்கின்றன.
            (உ) க.துரையரசனின் www.duraiarasan.blogspot.com  என்ற வலைதளத்தில் காப்பியத்தில் திருப்பு முனைகள்: சிலப்பதிகாரத்தில் கானல் வரி என்ற கட்டுரை காணப்படுகின்து.

ஓலைச் சுவடி வடிவில்: சிலப்பதிகார ஓலைச்சுவடிகளையும் இத்தளத்தில் காணும் பேறு நமக்குக் கிட்டுகிறது. இதற்கு நாம் இத்தளத்தின் சுவடிக் காட்சியகம் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். இதில் காப்பியங்கள் என்ற பகுதியில் முதலில் இடம் பெற்றிருப்பது சிலப்பதிகாரத்தின் சில ஓலைச் சுவடிகளாகும். 
விக்கிபீடியாவில்: சிலப்பதிகாரம் பற்றிய செய்திகள் விக்கிபீடியாவில் www.ta.wikipedia.org  கட்டுரை வடிவில் கிடைக்கின்றன. இத்தளத்தின் கட்டுரைப் பகுதிக்குச் சென்றால் 18 தலைப்புகளில் சிலப்பதிகாரச் செய்திகள் கட்டுரைகளாகக் கிடைக்கின்றன. 
கலைகள் பற்றிய செய்திகள்: (1) சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 11 வகை ஆடல்களைச் சிவபெருமான் ஆடிய எழுவகை ஆடல்களோடு ஒப்பிட்டுக் காட்டும் வகையில் சேலம் பா.அன்பரசு எழுதியுள்ள ஆனந்த நடனம் என்ற கட்டுரை, தொகுப்புகள் www.thoguppukal.wordpress.com/2011/09/22  என்னும் தளத்தில் உள்ளது.
(2) Tamil Heritage என்ற வலைதளத்தில் (http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_phocagallery&view=category&id=102&Itemid=418) பூம்புகார் கலைக்கூடக் காட்சிப் படங்கள் காணக் கிடைக்கின்றன.
(3) www.vinayaganickson.blogspot.in என்ற வலைப்பூவில் சிலப்பதிகாரத்தில் கற்பு நெறி என்ற கட்டுரையில் கண்ணகி, கோப்பெருந்தேவி, மாதவி ஆகியோர்தம் கற்புத் திறம் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இதில் சில படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
(4) www.madhavipanthal.blogspot.in என்ற வலைப்பூவில் சிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள் என்ற கட்டுரை காணப்படுகிறது. இதில் சிலப்பதிகாரக் காட்சிகள் காணக்கிடைக்கின்றன.
(5) கூகுள் தேடுபொறியில் படங்கள் என்ற பகுதிக்குச் சென்று சிலப்பதிகாரம் என்று தட்டுச்சுச் செய்தால்  சிலப்பதிகாரம்  பற்றிய படங்களும் செய்திகளும் குவிந்து கிடக்கின்றன.
            (அ) தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய தளம்: இத்தளத்தில் சிலம்பு, இளங்கோவடிகள், கண்ணகி வழக்குரைத்தது, ஞாயிறுதிங்கள்மழை வணக்கம், கோவலன்-கண்ணகி கவுந்தியடிகளின் செல்லுதல், இளங்கோவடிகள், கோவலன்-கண்ணகி திருமணம், மாதவி நடனம், கோவலன் மாதவியின் வீட்டிற்குச் செல்லுதல், கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குச் செல்லுதல், கோவலன்- பொற்கொல்லன் சந்திப்பு, கோவலன் கொலை செய்யப்படுதல், கண்ணகி வழக்குரைத்தல் ஆகிய செய்திகள் பட விளக்கங்களுடன் அமைந்துள்ளன. மேலும் மகர யாழ், சகோட யாழ், பேரியாழ் ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன.
     (ஆ) தமிழ் ஹிந்து www.tamilhindu.com  என்னும் இணையதளத்தில் சிலப்பதிகாரக் காட்சிகளுடன் கூடிய விளக்கங்கள் கிடைக்கின்றன.
     (இ) www.indianetzone.com என்ற இணையதளத்தில் குரவைக்கூத்து பற்றிய ஆங்கிலக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
     (ஈ) www.tamilnation.co  என்ற இணையதளத்தில் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை மற்றும் ஆய்ச்சியர் குரவையில் இடம் பெற்றுள்ள கலைகள் தொடர்பான செயதிகள் Tamizh music during the silappathikaram period   என்ற ஆங்கிலக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
     இங்ஙனம் சிலப்பதிகாரம் பற்றியும் சிலப்பதிகாரக் கலைகள் பற்றியும் ஏராளமான செய்திகள் இணைய தளங்களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் இளம் ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டால் தமிழாய்வுத் தரம் உலகத் தரத்துக்கு இணையாக ஈடேறும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

பார்வைக்கு:

1)      www.maduraiproject
2)      www.Tamilvu.org
3)      www.solvanam.com
4)      www.sekalpana.com
7)      www.ta.wikipedia.org
9)      www.tamilheritage.org