திங்கள், 15 நவம்பர், 2010

சிலப்பதிகார 'வரிகள்' - 2

சிலப்பதிகார 'வரிகள்' - 2
தேர்ச்சி வரி:
தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில், பிரிவினால் உண்டாகும் துயர் மிகுதியை, அவளது சுற்றத்தாரிடம் தலைவி கூறிக் கூறி வருந்துவது.

காட்சி வரி:
தலைவன் பிரிவால் உண்டான துயர மிகுதியைக் காதலி பித்துப் பிடித்தவளைப் போல், கண்ணில் படுபவர்களிடம் பண்ணிப் பண்ணிக் கூறுதலாகிய நடிப்பு.

எடுத்துக் கோள் வரி:
பிரிவின்கண் துயருறும் காதலி கையறு நிலையினளாய் மயங்கி விழுதலும், அருகிருந்த சேடியர் அவளைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவிப்பதும்.

இங்ஙனம் சிலப்பதிகாரத்தில் பல தரப்பட்ட 'வரிகள்' இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் மாதவி தன நடிப்புத் திறத்தால் கோவலனைப் பலவாறாக மகிழ்வித்துத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டாள். ஆயினும் கூட, விதி அவர்களைப் பிருத்து வேடிக்கைப் பார்த்தது.

சிலப்பதிகார 'வரிகள்' - 1

சிலப்பதிகார 'வரிகள்' - 1

கண்கூடு வரி:
தான் நயந்து ஏற்ற தலைமகன் கோவலனோடு அவள் வாழ்ந்த மனை வாழ்வில் அவனால் தனக்கொரு நலம் என்ற எண்ணத்தின் எண்ணமும் இல்லாமல் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் அவனை மகிழ்விப்பதே தனக்கொரு புருஷார்த்தம் என்று கொண்டு அவள் வாழ்ந்தது.

உள்வரி:
தனது உருவத்தை மறைத்து வேறொரு பெண்போல் வேடம் புனைந்து தோற்றம் அளிக்கும் விளையாட்டு. ஊடிப்பிரிந்து தலைவன் உற்ற துன்பத்தை அகற்றி மாதவி நடித்த நடிப்புத் தொழில்.


புறவரி: 
 அணிந்து மகிழ விழையும் காதலனை நெருங்காமல் விலகிச் சென்று அவனது வேட்கையை மிகுவிக்கும் விளையாட்டு.

கிளர்வரி:
ஊடிப்பிரிந்து காதலனைச் சேர்த்து வைக்கச் சிலதியர் அவர்களுக்கு இடை நின்று முயல்வதும், அப்பொழுது காதலி, அணைய விழையும் காதலனின் மொழியில் அவன் கருதாத குறிப்பைக் கற்பித்துக் கொண்டு ஊடி அகல்வது.