செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உயர் சிந்தனைகள்

உயரே உயரே செல்ல...
மனிதா நீ
சிந்தி உயர்வாய்!

உள்ளவதெல்லாம் உயர்வுள்ளல்........

வெள்ளத்தனைய மலர் நீட்டம் ......

கான முயலெய்த அம்பினில் யானை
 பிழைத்த  வேல் ஏந்தல் இனிது

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்

விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்று முளைக்காது

பிறர் உனக்கு எதை செய்ய வேண்டும் என்று நீ
எண்ணுகிறாயோ அதை நீ பிறருக்கு செய்.

பிறர் உனக்கு எதை செய்யக் கூடாது என்று நீ
எண்ணுகிறாயோ அதை நீ பிறருக்கு செய்யாதிரு.

நன்மைக்கே நன்மை விளையும்
தீமைக்குத் தீமைதான் விளையும்.

பெண் சாதனையாளர்கள்

பெண் சாதனையாளர்களை எண்ணிப் பாருங்கள்.... சாதிக்க வழி கிடைக்கும்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.... (வள்ளுவர்)

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா    (கவிமணி)

குடும்ப விளக்கு  (பாரதிதாசன்)

வெளியில் தெரியாத வேர்கள

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  • மேரிகியூரி                         -  2 முறை நோபல் பரிசு
  • ஸ்டெபி ஃகிராப்               -  டென்னிஸ் - 22 முறை கிராண்ட சலாம் பட்டம்                                                          ஒலிம்பிக் தங்கப் பதக்கம்
  • செரினா                                -   டென்னிஸ் - 22 முறை கிராண்ட சலாம் பட்டம்                                                          4 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம்
  • அன்னை தெரசா               -   கருணையின் மறு வடிவம்
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி     - ஐ.நா.சபையில் இசைக்கச்சேரி செய்த முதல்                                                            இந்தியர்
  • சரோஜினி நாயுடு            - கவிஞர், சமூக ஆர்வலர், முதல் பெண் ஆளுநர்
  • கல்பனா சாவ்லா             - 1997ல் கொலம்பியா விண்கலத்தில் பயணித்த                                                            முதல் பெண்
  • ஜோயிதா                           - திருநங்கை (மேற்கு வங்கம்) முதல் பெண் நீதிபதி
  • பவானி தேவி                   - ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட்                                                     உலகக்கோப்பை வாள்வீச்சுப் போட்டியில்                                                                    தங்கம் வென்றவர்
  • மிதாலிராஜ்                      - கிரிக்கெட் கேப்டன் - அதிக ரன்கள் குவித்தவர்
  • அவனி சதுர்வேதி         - 24 வயது - (மிக் 21 பைசன் விமானம்)                                                                              முதல் இந்தியப் பெண் விமானி
  • நந்தினி                              - ஒடிசாவில் நடைபெற்ற மகளிர் கால்பந்து                                                                  போட்டியின் தங்கம் வென்றஅணித்தலைவி 
  • ஸ்ரேயாஷி சிங்           - கமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்
  • முத்துலெட்சுமி ரெட்டி  இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

இடுக்கண் வருங்கால் நகுக

துன்பம் வரும் வேளையில சிரிங்க
என்று வள்ளுவனும் சொல்லி வைச்சான் சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் 
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு.....    (கண்ணதாசன்)

கவலை கொண்ட மனிதர்கள் எங்ஙனம் சிரிப்பார்கள்.
சரி...  இவ்வுலகில் யாருக்குத்தான் கவலைகள் இல்லை.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் ஆயிரம் இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடிநின்றால் ஓடுவதில்லை
உனக்கும் கீழே வாழ்ந்தவன் கோடி 
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...         (கண்ணதாசன்)

இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க அதன் இயல்பு உணர்ந்தோரே  (பக்குடுக்கை நன்கணியார்)

பாலுக்கு சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கை அற்ற கூழுக்குப்போட உப்பு இல்லை என்பார்க்கும்
முள் குத்தித் தைத்த காலுக்கு செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி(தங்கக் கட்டில்) மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் (கவலை) ஒன்றே.

எனவே,
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ    (ஈரோடு தமிழன்பன்)


கவலையை மறப்போம், மகிழச்சியாய் வாழ்வோம்.



தேர்வு நெறியாளர் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்


தேர்வு நெறியாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
                                                (31.01.2018 - 30.01.2020)

அறிவுத் திருக்கோயில்




ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் 20.10.2019ல் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்ற நிகழ்ச்சியின் நினைவாக

தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு, வென்றிரு.

அன்பிற்கினிய நண்பர்களே,

மனிதர்கள் எவ்வளவு அறிவு படைத்தவர்களாக இருந்தாலும், விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தால் முன்னேற்றம் உடையவர்களாக இருந்தாலும் என்றும் எப்பொழுதும் மனிதனை விட இயற்கையே சக்தி வாய்ந்தது என்பதை கொரோனா வைரஸ் உணர்த்திக் கொண்டுள்ளது.
இந்நிலையில்,

வள்ளலார் குறிப்பிட்டதைப் போல  தனித்திரு, விழித்திரு, பசித்திரு.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தனித்திரு,  விழித்திரு, வீட்டிலிரு, வென்றிரு.

இந்நேரத்தில் உடல் நலம் சார்ந்த சில குறிப்புகளை நினைவு கூர்கிறேன்.


  • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
  • சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்
  • SOUND MIND IN SOUND BODY
  • HELTHY MIND HEALTHY BODY 
தன்னைத்தான் பேணாததாலும் சரீரத்தின் தண்டிப்பாம்
பின்னுற்ற விசாரத்தாலும் அன்னத்தை வெறுப்பதாலும்
அரை உடல் முழுகலாலும்
தன்மத்தை (அறமு) இகழ்வதாலும்
சரீரத்தில் நோய் உண்டாகும்.

எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வீட்டிலிருங்கள், கொரோனா அச்சமின்றி இருங்கள்.

வாழ்க வளமுடன்