ஞாயிறு, 21 அக்டோபர், 2012

வரவேற்புரையில் நான்

ஆர்வமுடன் உறுப்பினர்கள் பதிவு செய்தல்

அணிவகுத்து நிற்கும் கார்கள்

மண்டலத் தலைவர் தலைமை உரை

பயிற்சி முகாமில் பங்கேற்றோர்
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தஞ்சை-நாகை-திருவாரூர் மண்டலத்தின் செயலராக நான் இருந்து வருகிறேன். இம்மண்டலத்தில் பணியாற்றும் இச்சங்க உறுப்பினர்களுக்கு இம்மண்டலத்தின் சார்பில் 20-10-102 சனிக்கிழமை அன்று ஒரு நாள் பயிற்சி முகாம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இம்மண்டலத்தில் கும்பகோணம் ஆடவர், மகளிர் கல்லூரிகள், தஞ்சாவூர் சரபோஜி, குந்தவை கல்லூரிகள், மன்னார்குடி இராஜகோபால சுவாமிகள் அரசு கல்லூரி, திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி, மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி ஆகிய எட்டுக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களுள் 75க்கும் மேற்பட்டவர்கள் பெண் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பயிற்சியின் மூலம் புதிய பேராசிரியர்கள், பேராசிரியைகள் த.நா.அ.கல்லூரி ஆசிரியர் கழகம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை நன்கு அறிந்து கொண்டதோடு முன்பை விட மிகுந்த எழுச்சியோடும் பற்றுதலோடும் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று ஆர்வம் பொங்கக் கூறினர். இப்பயிற்சி முகாம் தொடர்பான சில புகைப்படங்கள் மேலே இடம் பெற்றுள்ளன.