திங்கள், 13 ஏப்ரல், 2020

படித்ததில் பிடித்தது - 2

தனிப்பாடல்கள் சில சொல் விளையாட்டுகளாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

காளமேகப்புலவர்

செற்றலரை வென்ற திருமலைராயன் கரத்தில்
வெற்றிபுரியும் வாளே வீரவாள் - மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாள் இவாள் அவாளாம்.

அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
எண்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் (சந்தனம்) என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் (கரும்பு) என்றேன்  தின்னும் என்றாள்
பகடென்றேன் (மாடு) உழும் என்றாள் பழனம் தன்னை
கம்பமா (கம்பு மாவு) என்றேன் நற்களியாம் என்றாள்
கைம்மா(கையை உடைய விலங்கு - யானை) என்றேன்  சும்மா கலங்கினாளே.

படித்ததில் பிடித்தது - 1

நான் படித்ததில் பிடித்த சில தனிப்பாடல்களைக் கீழே தருகிறேன். படித்து மகிழுங்கள்:

1. செருப்பு:
கல்லூம் உறுத்தாது
காலில் முள் தையாது
எல்லைமார்த் தாண்டன் சூடு ஏறாது - தொல்லைவரு
மாலை இருளில் வழிநடக்கக் கூசாது
காலில் செருப்பு இருந்தக் கால்.

2. பேசாத காதலியிடம் ... காதலன்
(அழகிய சொக்கநாதப் பிள்ளை பாடியது)
வெள்ளரிக்காயா     வெண்ணிறத் திருமாலுக்குத் தாயா)
விரும்பும் அவரைக்காயா ( விரும்புவோரைக் கோபித்தல்)
உள்ள மிளகாயா  (உள்ளம் இளகாயா)
ஒரு பேச்சுரைக்காயா (ஒரு வார்த்தை பேச மாட்டாயா)

(அத்திக்காய் காய் காய்....கண்ணதாசனை நினைவூட்டுகிறது)



3. ஔவையார் பாடல்

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நித்தம் நடையும் நடைப்பழக்கம்
நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்

4. கம்பர் ஔவையிடம், ஒரு காலடி நாலிலைப் பந்தலடி எனச் சொல்லிப் பொருள் கேட்டபொழுது பாடியது)

எட்டே கால் லட்சணமே எமனேறும் பரியே  (எமனின் வாகனம்எருமை)
மட்டில் பெரியம்மை வாகனமே  (மூதேவியின் வாகனம் கழுதை)
மட்டமேல் கூரை இல்லா வீடே (குட்டிச்சுவர்)
குலராமன் தூதுவனே (குரங்கு)
ஆரையடா சொன்னாய் அடா (ஆரைக்கீரை)


மருமகன் - யார்?

பெண் கொடுக்கலாம்
இக்காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடுவதாக இருந்தாலும் சரி, மாப்பிள்ளைக்குப் பெண் தேடுவதாக இருந்தாலும் சரி மிகக் கடினமான வேலைதான். இதில் பெண்ணுக்கு பாப்பிள்ளைத் தேடுவதில் கூடதல் கவனம் தேவைப்படுகிறது.

    1. புரைதபு குணமுடையோன்   ( குற்றமற்ற நற்பண்பு உடையோன்)
    2. சீலமுடையோன்   (நல்லொழுக்கம் உடையோன்)
    3. வனப்புடையோன்  ( அழகு உடையவன்)
    4. பூரண ஆயுளுடையோன் 
    5. துப்புடையோன்   (ஆற்றல் மிக்கவன்)
    6. கரையில் விற்பனமுடையோன்  ( அளவற்ற கல்வி கற்றவன்)
    7. பாலனம்  புரியும் கருத்தர் ( தன்னைச் சுற்றி உள்ளவரைக் காப்பவன்)
    8. குறைவிலா செல்வமுடையோன் ( நிறைந்த செல்வமுடையவன்)

பெண் கொடுக்கக் கூடாது
    1. முத்தியில் விருப்பமுடையோன் (துறவு எண்ணம் கொண்டோர்)
    2. மிடியன்  (வறியவன்)
    3. மூர்க்கண்  (அரக்கன்)
    4. சேண் தேயத்தில் உள்ளோன்  (வெளிநாட்டில் உள்ளவன்)
    5. புத்தி இல் வயிரம் பொருந்திய சூரன் (பழிக்குணமுடையவன்)
    6. புதல்வி தன் வயதின் மும்மடங்குடைவன் (பெண்ணைவிட அதிக                                                                                                          வயதுடையவன்)


தனிப்பாடல்களில் தலைசிறந்தோர்

தனிப்பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கோர்


தனிப்பாடல்களில் அரிய கருத்துகள் நிரம்பக் கிடக்கின்றன. ஆனால் தனிப்பாடல்களும் அவற்றை வரைந்தோர்களும் தமிழுலகத்தால்  பெரிதும் கண்டு கொள்ளப்படவில்லை.. இந்நிலை மாறி பள்ளி, கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை பாடமாக்கப்பட வேண்டும்.

  • இரட்டையர்கள்
  • இராமச்சந்திரக் கவிராயர்
  • இராமசாமிக் கவிராயர்
  • காளமேகப்புலவர்
  • சத்திமுற்றப் புலவர்
  • சவ்வாதுப் புலவர்
  • சுப்பிரதீபக் கவிராயர்
  • சொக்கநாதப் புலவர்
  • படிக்காசுப் புலவர்
  • கடிகை முத்துப் புலவர்
  • வரதுங்கப் பாண்டியன்
  • அந்தகக்கவி வீரராகவ முதலியார்