சனி, 27 நவம்பர், 2010

கோழிப் பாம்பு

கோழிப்பாம்பு என்ற குக்குடசர்ப்பம் குறித்த செய்திகள் சீவகசிந்தாமணி, மேருமந்திர புராணம், ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. பாம்புக்கு ஆயுள் நீளுமானால் அதன் உடல் குறுகி கோழி பறக்கும் தூரம் பறக்கும் ஆற்றல் அடையும் என்பதும் இதற்குக் கோழிப்பாம்பு என்பது பெயர் என்பதும் விளங்குகிறது.


மைசூரில் தொட்டபெட்டா மலையின் மேல் பாகுபலி என்ற முனிவரின் உருவம் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்திற்கு அருகில் கோழிப்பாம்பின் உருவம் ஒன்று கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்தின் தலையும் கழுத்தும் பாம்பின் உருவமாகவும் உடம்பும் காலும் கோழியின் உருவமாகவும் அமைந்திருக்கின்றன. (காண்க: செந்தமிழ்செல்வி, சிலம்பு 24, பரல் 11)

3 கருத்துகள்:

Astrology Books collection சொன்னது…

Wow!!!... What a Good News.

duriarasanblogpsot.com சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
செல்வமுரளி சொன்னது…

வணக்கம் துரையரசன் சார்
நலம் நலமறிய ஆவல்.

செம்மொழி மாநாட்டில் சந்தித்தபின் தொடர்பே இல்லை. என் முகவரி : murali1309@gmail.com