சனி, 27 நவம்பர், 2010

உதிரப்பட்டி - இரத்தகாணி - நெய்த்தோர் பட்டி

தன் அரசனுக்காக இரத்தம் சிந்திப் போராடி வெற்றி பெற்றவர்களுக்கும் தமக்காக உயிர் நீத்தவர்களுக்கும் அரசன் அவ் வீரர்களது வீரத்தைப் பாராட்டி நிலம் தானம் கொடுப்பது வழக்கம். அத்தகைய நிலங்களுக்கு இரத்தகாணி, உதிரப்பட்டி, நெய்த்தோர் பட்டி என்று பெயர்.போர்க்களத்தில் பிறருக்காக உயிரைக் கொடுத்தவர்களுக்கு மட்டுமின்றி போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு போருக்க முடியாமலோ உயிர் நீத்தவர்களுக்கும் உதிரப்பட்டி என்ற நிலம் தானம் வழங்கப்பட்டுள்ளது.


நெய்த்தோர்பட்டிகை என்று பெருங்கதை கூறுகிறது. நெய்த்தோர் என்றால் இரத்தம் அல்லது உதிரம் என்றும் பட்டிகை என்றால் பத்திரிக்கை என்பதை விட பட்டி என்றும் பொருள் கொள்ளலாம். நெய்த்தோர் பட்டிகை என்று பெருங்கதை கூறுவதை சாசனங்கள் உதிரப்பட்டி என்றும் இரத்தகாணி என்றும் கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற ஊரில் உதிரப்பட்டி என்ற பெயரில் நிலப்பகுதி இன்றும் இருப்பதாக தி. வை. சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.


இதனை நன்கு விளக்கமாக மயிலை சீனி வேங்கடசாமி தமது உதிரப்பட்டி அல்லது இரத்தகாணி என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (காண்க: செந்தமிழ்செல்வி, சிலம்பு 22, பரல் 10. )

கருத்துகள் இல்லை: