சிலப்பதிகார 'வரிகள்' - 2
தேர்ச்சி வரி:தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில், பிரிவினால் உண்டாகும் துயர் மிகுதியை, அவளது சுற்றத்தாரிடம் தலைவி கூறிக் கூறி வருந்துவது.
காட்சி வரி:
தலைவன் பிரிவால் உண்டான துயர மிகுதியைக் காதலி பித்துப் பிடித்தவளைப் போல், கண்ணில் படுபவர்களிடம் பண்ணிப் பண்ணிக் கூறுதலாகிய நடிப்பு.
எடுத்துக் கோள் வரி:
பிரிவின்கண் துயருறும் காதலி கையறு நிலையினளாய் மயங்கி விழுதலும், அருகிருந்த சேடியர் அவளைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவிப்பதும்.
இங்ஙனம் சிலப்பதிகாரத்தில் பல தரப்பட்ட 'வரிகள்' இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் மாதவி தன நடிப்புத் திறத்தால் கோவலனைப் பலவாறாக மகிழ்வித்துத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டாள். ஆயினும் கூட, விதி அவர்களைப் பிருத்து வேடிக்கைப் பார்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக