புதன், 15 ஏப்ரல், 2020

எங்கள் தமிழ்




எங்கள் தமிழ்
I தமிழின் பெருமைகள்

·         தமிழ்                   --       மி  ழ்  (வல் - மெல் - இடை)
·      
                    உயர்தனிச் செம்மொழி  --   உயர்ந்த மொழி
தனித்த மொழி
 செம்மையான மொழி
·         தமிழ்           --    1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்
2) அருந்தமிழ்
3)
அழகுதமிழ்
4) அமுதத்தமிழ்
5)
அணித்தமிழ்
6)
அன்னைத்தமிழ்
7)
இசைத்தமிழ்
8)
இயற்றமிழ்
9)
இன்றமிழ்
10)
இன்பத் தமிழ்
11) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்
1
2) எந்தமிழ்
13)
ஒண்டமிழ்:- ஒண்மை+தமிழ் (ஒளிதரும் தமிழ்)
14)
கனித்தமிழ்
15)
கற்கண்டுத்தமிழ்
16)
கன்னித் தமிழ்
17)
சங்கத்தமிழ்
18)
சுடர்தமிழ்
19)
சுவைத்தமிழ்
20)
செந்தமிழ்
21)
செழுந்தமிழ்
22)
தனித்தமிழ்
23)
தண்டமிழ்
24)
தாய்த்தமிழ்
25)
தீந்தமிழ்
26) தெய்வத்தமிழ்
27)
தேன்தமிழ்
28)
பசுந்தமிழ்
29)
பைந்தமிழ்
30)
பழந்தமிழ்
31)
பாற்றமிழ்
32)
பாகுதமிழ்
33)
நற்றமிழ்
34)
நாடகத்தமிழ்
35)
மாத்தமிழ்
36)
முத்தமிழ்
37)
வண்டமிழ்
38) வளர்தமிழ்


·         ஆழ்வார்கள்                   --   தமிழை அடைகொடுத்தே அழைக்கின்றனர் (22)
விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்'
·         (நாம்) திரு + ஞானசம்பந்தர் --    அவர் தமிழ் ஞானசம்பந்தன் என்கிறார்

·         பாரதியார்          -- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
  இனிதாவது எங்கும் காணோம்.

  செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்   
  வந்து பாயுது காதினிலே. (செந்தமிழ்நாடு – பெயர்)

·         பாரதிதாசன்        -- தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
   தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
·         தமிழ்விடுதூது     -- இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
                         விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்
·         அதியமான்        -- தமிழுக்காக (ஔவைக்காக) அதிசய நெல்லிக்கனி

·         குமண வள்ளல்    -- தமிழுக்காகத் தன் தலையையே கொடுத்தான்
·         நந்திவர்மன்        --  அறம் வைத்துப் பாடிய இக்கலம்பகத்தைக்
   கேட்காதீர்கள்; உயிர் போய்விடும் என்று பாடிய     
   புலவனே கூறியபோதும் தமிழைச் சுவைப்பதன்  
   மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு
   வரவேற்பேன்.
·         ஒட்டக்கூத்தர்- பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள் (மனைவி)
போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?
·         சுந்தரர்      -- பித்தா பிறைசூடி – இறைவனைப் பித்தன் என்று திட்டினார்
தமிழால் திட்டியதற்காக இறைவன் மகிழ்ந்தான்.
(எட்டே கால் இலட்சணமே எமன் ஏறும் வாகனமே)
II தமிழில் என்னதான் இருக்கிறது?
·         இரு கண்கள் -- அகமும் புறமும் (காதலும் வீரமும்)
Ø  யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
Ø  இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
Ø  வழுத்தினாள் தும்மினே னாக அழித்து அழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று
Ø  தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
Ø  செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

Ø  வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்;
ஐய, அற்றால் அன்பின் பாலே. (குறுந்தொகை)


Ø  காவற்பெண்டு (புறம். 86)
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
Ø  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  (புறம்.72)
நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
Ø அறம் சார்ந்தவை
v  பொன்முடியார் (புறம். 312)
ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!  

v  நல்லந்துவனார் (கலித்தொகை)

ஆற்றுதல் என்பதுஒன்று அளந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை

அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்

v  பிசிராந்தையார் (புறம். )

காய் நெல்லறுத்துக் கவளம் கொளினே

v  ஔவையார் (புறம். 206)

வாயிலோயே வாயிலோயே
...............................................................
................................நெடுமானஞ்சி
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
காவினெம் கலனே சுருக்கினம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல்சிறாஅர்
முழுவுடைக் காட்டகத் தற்றை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.



யாதும் ஊரே யாவரும் கேளிர்

III  இன்றைய நிலை (அவலம்)

·         பிழைபடப் பேசுதல்
·         பிழைபட எழுதுதல்
·         சரியாகப் படிக்கத் தெரியாமை
·         ஆர்வமின்மை
·         அன்று பிழைகளைத் தேடித் தேடி மதிப்பெண்களைக் குறைத்தனர்
·         இன்று விடைகளைத் தேடித் தேடி மதிப்பெண்களை அள்ளிப்போடுகின்றனர்



                  

மாணவி: சார், நீங்க செய்யாத தப்புக்கு அடிப்பீங்களா? ஆசிரியர்: சே சே அடிக்கமாட்டேன். மாணவி : வீட்டுப் பாடம் செய்யலை சார்.
ஆசிரியர் : ???
புலியின் முன்னங்கால்கள் சிறியவை  (நற்றிணை)

36. குறிஞ்சி

குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை

ஆண்குரங்கை இழந்த பெண் குரங்கு இறத்தல்.
(குறுந்தொகை)


69. குறிஞ்சி

கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
குஞ்சு பொரித்த நண்டு இறக்கும்தனது குட்டியையே முதலை தின்னும். (ஐங்குறுநூறு)

தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்


ஈசல் ஒரு நாளில் இறந்துவிடும் என்ற குறிப்பு (புறநானூறு)
செம் புற்று ஈயல் போல,
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே!



பகல் போல் தோன்றும் அளவிற்கு ஒளி விளக்குகள். (ஐங்குறுநூறு)


56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா,
வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன



ஆகுபெயர்:
கல்லாவில் இருப்பவர் : சாப்பிட்ட பில்லுக்குக் காசு கொடுக்காமல் போறீங்களே சார்?
சாப்பிட வந்தவர் : நான் தோசை தானே சாப்பிட்டேன். பில் எல்லாம் சாப்பிடலே.



தொலைதூரம் வண்டியில் சேம அச்சு (புறநானூறு)

102
உமணர் கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன


வெந்நீர் சேமச் செப்பில் பாதுகாக்கப்பட்டது. (குறுந்தொகை)
வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெறீஇயரோ

1.எடிசன் வீட்டு ஏணிப்படியும் ஷாக் அடிக்கும்  (கம்பன் வீட்டுக்..)

2.
ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானேவரும்  (ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்..)
3. கார் ஓட டயரும் தேயும் (எரும்பு ஊர.., பழகப் பழக..)

4.
சைக்கிளுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை (கழுதைக்குத்..)

5.
தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் (தான் ஆடா...)

6.
தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் (தன் வினை..)

7.
துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது (கத்தி   முனையை விட..)

8.
மிதிக்க மிதிக்க சைக்கிளும் நகரும் (அடி மேல்..)

9.
முடியுள்ள போதே சீவிக்கொள் (காற்றுள்ள போதே...)





கருத்துகள் இல்லை: