செவ்வாய், 7 ஏப்ரல், 2020

இடுக்கண் வருங்கால் நகுக

துன்பம் வரும் வேளையில சிரிங்க
என்று வள்ளுவனும் சொல்லி வைச்சான் சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் 
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு.....    (கண்ணதாசன்)

கவலை கொண்ட மனிதர்கள் எங்ஙனம் சிரிப்பார்கள்.
சரி...  இவ்வுலகில் யாருக்குத்தான் கவலைகள் இல்லை.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் ஆயிரம் இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடிநின்றால் ஓடுவதில்லை
உனக்கும் கீழே வாழ்ந்தவன் கோடி 
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...         (கண்ணதாசன்)

இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க அதன் இயல்பு உணர்ந்தோரே  (பக்குடுக்கை நன்கணியார்)

பாலுக்கு சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கை அற்ற கூழுக்குப்போட உப்பு இல்லை என்பார்க்கும்
முள் குத்தித் தைத்த காலுக்கு செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி(தங்கக் கட்டில்) மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் (கவலை) ஒன்றே.

எனவே,
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ    (ஈரோடு தமிழன்பன்)


கவலையை மறப்போம், மகிழச்சியாய் வாழ்வோம்.



கருத்துகள் இல்லை: