திங்கள், 31 டிசம்பர், 2012

கல்விசார் தளங்களும் வேலை வாய்ப்புத் தளங்களும்




நோக்கம்

தமிழைக் கற்கும், கற்பிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கணினித் தொடர்பான அறிவு பச்சிளங்குழந்தையாகவே தமிழகத்தில் உள்ளது. இந்நிலையில் இணையத்தில் கிடைக்கும் தமிழ்த் தரவுகளையும் தகவல்களையும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்துகின்ற முயற்சியும் தேவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கணினித் தமிழை வளர்ப்பது, அதில் உள்ள ஒருங்குறியீட்டுச் சிக்கலைத் தீர்ப்பது, இன்னும் பிற தடைகளைத் தகர்ப்பது போன்ற செயல்களுக்கு அளிக்கப்படும் அதே அளவிற்கான முக்கியத்துவம் இதற்கும் அளிக்கப்பட வேண்டும். அவ்வகையில் கல்வி சார்ந்த தளங்களை - வேலை வாய்ப்பு சார்ந்த தளங்களை தமிழை முதன்மையாகக் கொண்டு பயிலும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.

கட்டுரை - பொருண்மைப் பகுப்பு

இக்கட்டுரையில் கல்விசார் தளங்கள், வேலை வாய்ப்புத் தளங்கள் பற்றிய பொருண்மைகள் இடம் பெற்றுள்ளன.

பொருண்மைக் கூறுகள்

      கல்விசார் தளங்களைப் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் மற்றும் தகவல்களை வழங்குபவை என்று வகைப்படுத்தலாம்.

பல்கலைக்கழகங்கள்

     பல்கலைக்கழக இணையதளங்கள் பற்றிய புரிதல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்குமாயின் அவர்களுக்கு வேண்டிய தகவல்களை எளிதில் பெற முடியும். இதனால் உயர்கல்வியின் தரமும் ஆய்வுத் திறமும் மேம்படும். பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களை இருந்த இடத்தில் இருந்தவாறே மாணவர்கள் அறிந்து கொள்வதனால் அவர்களின் நேரமும் பொருளும் விரயமாகாமல் தவிர்க்கப்படுகிறது.

தமிழகப் பல்கலைக்கழக இணைய தளங்களைப் பார்வையிட்டால் கிடைக்கப் பெறும் செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம் 
1) பல்கலைக்கழகங்கள் பற்றிய பொதுத்தகவல்கள்
2) துணைவேந்தர், பதிவாளர், நெறியாளர் பற்றிய தகவல்கள்
3) நிர்வாகம் பற்றிய தகவல்கள்
4) ஆளவை (Senate), ஆட்சிக் குழு  (Syndicate) பற்றிய விவரங்கள்
5) பல்கலைக்கழக அளவில் நடத்தப்பெறும் பாடப்பிரிவுகள்
6) பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள்
7) இணைவு பெற்ற கல்லூரிகள்
8) தொலைநிலைக் கல்வி பற்றிய செய்திகள்
9) தேர்வு விவரங்களும் முடிவுகளும்
10) அனைத்து வகையான விண்ணப்பங்கள்
11) பல்கலைக்கழகத் துறைப் பேராசிரியர்கள்
12) பல்கலைக்கழகத்தில் வழங்கப்பெறும் பல்வேறு வசதி வாய்ப்புகள்
13) பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெறும் மாநாடு, கருத்தரங்குகள்,
   புத்தொளி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகள்
14) பல்கலைக்கழகச் செய்திகள் (University News)

பல்கலைக்கழக இணைய தள முகவரிகள்
  

1)      அழகப்பா பல்கலைக்கழகம்         www.alagappauniversity.ac.in
2)      அண்ணாமலைப் பல்கலைக்கழகம்   - www.annamalaiuniversity.ac.in
3)      பாரதியார் பல்கலைக்கழகம்         - www.b-u.ac.in
4)      பாரதிதாசன் பல்கலைக்கழகம்       - www.bdu.ac.in
5)       காந்திகிராம் பல்கலைக்கழகம்       - www.ruraluniv.ac.in
6)      மதுரை காமராசர் பல்கலைக்கழகம்     - www.mkuniversity.org
7)       மனோன்மணியம் சுந்தரனார்
                 பல்கலைக்கழகம் - www.msuniversity.org.in
8)       அன்னை தெரசா மகளிர்
                 பல்கலைக்கழகம்  - www.motherterasawomenuniv.ac.in
      9) பெரியார் பல்கலைக்கழகம்                    - www.periyaruniversity.ac.in

      10) தமிழ்ப் பல்கலைக்கழகம்           - www.tamiluniversity.ac.in
      11) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்     - www.tvuni.in
      12) சென்னைப் பல்கலைக்கழகம்       - www.unom.ac.in
      13) தமிழ் இணையக் கல்விக் கழகம்    - www.tamilvu.org
      14) தமிழ்நாடு திறந்தநிலைப்
                         பல்கலைக்கழகம்  - www.tnou.ac.in
      15) தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
                         பல்கலைக்கழகம்  - www.tnteu.in
      16) அண்ணா பல்கலைக்கழகம்         - www.annauniv.edu


நூலகங்கள் என்னும் தலைப்பில் த.இ.கல்விக்கழக நூலகம் (www.tamilvu.org), மதுரைத்திட்டம் (www.tamil.net/projectmadurai), ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html), இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன நூலகம் (www.cill.org), சென்னை நூலகம் (www.chennailibrary.com), நூலகம்.நெட் (www.noolaham.net), பெரியார் மின் நூல் தொகுப்புத் திட்டம், சமண மின் நூல்கள், வள்ளலார் நூல்கள், தமிழமுதம், சுவடிக் காட்சியகம் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றுள் த.இ.க. நூலகம் மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். இதில்
2000-க்கும் மேற்பட்ட நூல்கள் உரைகளுடனும் தேடுதல் வசதிகளுடனும் இடம் பெற்றுள்ளன. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களுக்கும் தேவையான நூல்களைக் கொண்டுள்ள இணைய நூலகம் இது ஒன்றே என்று கூறலாம்.

      இதற்கு அடுத்த நிலையில் பாராட்டத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது மதுரைத் திட்டம் ஆகும். இதில் 350-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மூலம் மட்டுமே தரப்பட்டுள்ளது. உரை நூல்களும் தேடுதல் வசதிகளும் இதன்கண் கிடையாது. இதனைப் போலவே சென்னை நூலகம், நூலகம்.நெட் ஆகியவை அமைந்துள்ளன. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆராய்ச்சிக்கு உகந்த வகையில் அமைந்துள்ளது.

தகவல்களை வழங்குபவை என்னும் தலைப்பில் விக்கிபீடியா (www.ta.wikipedia.org), விருபா.காம் (www.viruba.com), பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (www.ugc.ac.in), மனித வள மேம்பாட்டுத்துறை (www.mhrd.gov.in)., தமிழ்நாடு மாநில் உயர்கல்வி மன்றம் (www.tansche.org), தமிழக அரசு உயர் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை (www.tn.gov.org) முதலிய தளங்கள் சுட்டிக்கூறத்தக்கன.

வேலை வாய்ப்புத் தளங்கள் என்னும் பொருண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (www.tnpsc.gov.in), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (www.upsc.gov.in), இந்திய ஆட்சிப் பணி (www.civilserviceindia.com), ஆசிரியர் தேர்வு வாரியம் (www.trb.tn.nic.in), இணைய வேலை வாய்ப்பு மையங்கள் (www.naukri.com, www.monsterindia.com), வேலை வாய்ப்பகத் தகவல்கள் முதலான செய்திகளைப் பெறலாம்..

ஆய்வுப் பயன்

      இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை. ஆனால் எது எங்கு இருக்கிறது என்னும் புரிதலும் அதனை எங்ஙனம் பயன்படுத்துவது என்னும் அறிதலும் இல்லாமைதான் தமிழ் பயின்றவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறைபாடாகும். அதனைப் போக்கும் வகையிலான செய்திகளைக் கொண்டுள்ள இக்கட்டுரையின் மூலம் தமிழ் பயிலும் மாணவர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், வேலை தேடி அலையும் இலட்சக்கணக்கான இளைஞர்கள்  பயனடைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.


11வது இணைய மாநாட்டு நிறைவுரையில் முனைவர் மு.பொன்னவைக்கோ

இணைய மாநாட்டில் கட்டுரை வழங்குதல்

சான்றிதழ் பெறுதல்

கருத்துகள் இல்லை: