திங்கள், 13 ஏப்ரல், 2020

படித்ததில் பிடித்தது - 1

நான் படித்ததில் பிடித்த சில தனிப்பாடல்களைக் கீழே தருகிறேன். படித்து மகிழுங்கள்:

1. செருப்பு:
கல்லூம் உறுத்தாது
காலில் முள் தையாது
எல்லைமார்த் தாண்டன் சூடு ஏறாது - தொல்லைவரு
மாலை இருளில் வழிநடக்கக் கூசாது
காலில் செருப்பு இருந்தக் கால்.

2. பேசாத காதலியிடம் ... காதலன்
(அழகிய சொக்கநாதப் பிள்ளை பாடியது)
வெள்ளரிக்காயா     வெண்ணிறத் திருமாலுக்குத் தாயா)
விரும்பும் அவரைக்காயா ( விரும்புவோரைக் கோபித்தல்)
உள்ள மிளகாயா  (உள்ளம் இளகாயா)
ஒரு பேச்சுரைக்காயா (ஒரு வார்த்தை பேச மாட்டாயா)

(அத்திக்காய் காய் காய்....கண்ணதாசனை நினைவூட்டுகிறது)



3. ஔவையார் பாடல்

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நித்தம் நடையும் நடைப்பழக்கம்
நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்

4. கம்பர் ஔவையிடம், ஒரு காலடி நாலிலைப் பந்தலடி எனச் சொல்லிப் பொருள் கேட்டபொழுது பாடியது)

எட்டே கால் லட்சணமே எமனேறும் பரியே  (எமனின் வாகனம்எருமை)
மட்டில் பெரியம்மை வாகனமே  (மூதேவியின் வாகனம் கழுதை)
மட்டமேல் கூரை இல்லா வீடே (குட்டிச்சுவர்)
குலராமன் தூதுவனே (குரங்கு)
ஆரையடா சொன்னாய் அடா (ஆரைக்கீரை)


கருத்துகள் இல்லை: